Published:Updated:

மகசூலைகூட்டும் மண்புழு உரநீர்!தீவனச் செலவைக் குறைக்கும் அசோலா!

பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
பயிற்சி

பயிற்சி

மகசூலைகூட்டும் மண்புழு உரநீர்!தீவனச் செலவைக் குறைக்கும் அசோலா!

பயிற்சி

Published:Updated:
பயிற்சி
பிரீமியம் ஸ்டோரி
பயிற்சி

சுமை விகடன் மற்றும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் இணைந்து, கடந்த அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ‘மகசூலைக் கூட்டும் மண்புழு உரநீர்த் தயாரிப்பு’, ‘தீவனச் செலவைக் குறைக்கும் அசோலா’ ஆகிய தலைப்புகளில் நேரலை (ஆன்லைன்) பயிற்சியை நடத்தின. இரண்டு நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விவேகானந்தா கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் களப்பயிற்சிகள் குறித்து அதன் இயக்குநர் ராமகிருஷ்ணன் எடுத்துக் கூறினார். ‘மகசூலைக் கூட்டும் மண்புழு உரநீர்த் தயாரிப்பு’ குறித்த பயிற்சியில் பேசிய ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா, “மண்புழுக்கள் உடலில் வியர்வை போன்ற செலோமிக் என்ற திரவத்தைச் சுரந்து ஈரப் பதத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இந்தத் திரவத்தைச் சேகரித்துப் பயன் படுத்தப்படும் முறைதான் ‘மண்புழு உரநீர்’. மண்புழுக்களின் உணவுப்பாதையில் சுரக்கும் பல்வேறு வகையான என்சைம்கள், அமினோ அமிலங்கள் இந்தத் திரவத்தில் அடங்கி இருப்பதால், இது மிகச்சிறந்த நுண்ணூட்டச் சத்து.

பயிற்சி
பயிற்சி

இது பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும், மண்ணில் நுண்ணுயிர் பெருக்கியாகவும் உள்ளது. மண்புழு உரநீரைப் பயன்படுத்தும் போது, நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் மண்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பயிர்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் காய்களின் சுவையும் தரமும் நன்றாக இருக்கும். 20 சத விகிதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட நிலத்தை உழவு செய்து மண்புழு உர நீரை நிலத்தில் தொடர்ச்சியாகப் பாய்ச்சுவதால் மண்ணை வளமாக்கி இயற்கை விவசாயத்துக்கு ஏற்றபடி மாற்றிவிட முடியும்” எனக் கூறியதுடன், மண்புழு உரநீர்க்கட்டுமானம் அமைக்கும் முறையையும், அதன் செயல் விளக்கத்தையும் செய்து காண்பித்தார்.

அசோலா
அசோலா

‘தீவனச் செலவைக் குறைக்கும் அசோலா’ என்ற தலைப்பில் பேசிய ஆராய்ச்சி உதவியாளர் ராஜாமணி, “அசோலா, பாசி வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ‘மூக்குத்திப்பாசி’, ‘கம்மல் பாசி’ எனவும் சொல்கிறார்கள். கால்நடைகளின் தீவனச் செலவைப் பெருமளவு குறைப்பதால், ஏழைகளின் ‘ஸ்பைருலினா’ எனவும் சொல்கிறார்கள். அசோலா உற்பத்திக்குப் பசுஞ்சாணம்தான் அடிப்படை. அரைக்கிலோ அசோலாவை தாய் விதையாகப் போட்டால் போதும். தினமும் குறைந்தபட்சம் அரைக்கிலோ முதல் ஒரு கிலோ வரை அசோலாவை அறுவடை செய்யலாம்.

ராமகிருஷ்ணன், பிரேமலதா, ராஜாமணி
ராமகிருஷ்ணன், பிரேமலதா, ராஜாமணி


500 கிராம் பசுஞ்சாணம், 10 கிராம் ராக் பாஸ்பேட்டை 5 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை தொட்டிக்குள் கரைத்து விட்டுக் கொண்டே இருந்தால் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும். ஆடு, மாடுகள் மட்டுமல்லாமல் கோழி, பன்றி, மீன், முயல் ஆகியவற்றுக்கும் பசுந்தீவனமாகக் கொடுக் கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச்சாண வாசனை இருக்கும் என்பதால், அசோலாவை 4 முதல் 5 முறை நல்ல தண்ணீரில் அலசிய பிறகு தீவனமாகக் கொடுக்கலாம்.

மண்புழு உரநீர்
மண்புழு உரநீர்

அசோலா வளருமிடங்களில் அந்துப்பூச்சி, கொசுத்தொல்லை இருக்காது. அசோலாவைக் கால்நடைக்குத் தீவனமாக மட்டுமல்லாமல், நன்கு சுத்தம் செய்து வடை, பக்கோடா என மதிப்புக்கூட்டிய உணவாகவும் சாப்பிடலாம்” என்றவர், அசோலா வளர்ப்புச்செலவைக் குறைக்கும் செயற்கை நீர்த்தொட்டி அமைக்கும் முறையையும், பராமரிப்பில் கவனிக்க வேண்டியவற்றைப் பற்றியும், பயன்படுத்துவதைப் பற்றியும் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சிகள் பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டன. மண்புழு உரநீர் குறித்த வீடியோவை https://www.facebook.com/PasumaiVikatan/videos/197115362563780/ என்ற லிங்கில் சென்று காணலாம். அசோலா குறித்த வீடியோவை https://www.facebook.com/PasumaiVikatan/videos/439106857633355/ என்ற லிங்கில் சென்று காணலாம்.