2021-22-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகள் இங்கே இடம் பெறுகின்றன.

சுந்தர விமல்நாதன், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர்:

‘‘இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட். ஏற்கெனவே போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு இந்த பட்ஜெட் ஆறுதலாக இல்லை. இவர்கள் சொல்லியிருக்கும் விளைபொருள் உற்பத்தி விலை உயர்வுக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாட முடியாது. விவசாயிகள்தான் உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறார்கள். மேலும் கடன் வழங்கும் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடனைத் தள்ளுபடி செய்யும்படிக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அதை இவர்கள் கேட்கத் தயாராக இல்லை. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய மோடி ‘2021-ம் ஆண்டுக்குள் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்’ என்றார். இப்போது அதுவும் நடக்கவில்லை. விவசாயிகளுக்குரிய நிவாரணத்தையும் இவர்கள் வழங்க மறுக்கிறார்கள். அதோடு மத்திய அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை.”

அறச்சலூர் செல்வம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்:

“மிக மோசமான பட்ஜெட்டாக இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களும், நிதிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோக கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட திட்டங்களையே மத்திய அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை. அப்போது ஒதுக்கிய நிதியும் இன்னும் செலவு செய்யப்படவில்லை. இப்போது ஒதுக்கியிருக்கும் நிதியைப் பார்க்கும்போது அரசாங்கம் வரும்காலங்களில் கொள்முதல் செய்வதைக் குறைத்துக்கொள்ளும் என்று தோன்றுகிறது. அரசாங்கம் கொள்முதல் செய்வதைக் குறைத்துக்கொண்டால் வெளிச்சந்தைகளில் அதைவிடக் குறைத்துக் கொடுக்கும் நிலைக்கு விவசாயிகள் ஆளாவர்.

கடந்த முறை ஒதுக்கப்பட்ட பிரதமர் நிதி உதவித் தொகையும் முழுவதுமாகச் சென்று சேரவில்லை. அதுவும் இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையும் குறைக்கப்பட்டிருக்கிறது. வேளாண் பொருள்களுக்குக் கட்டப்பட்ட குடோன்களை விற்பதாகச் சொல்லிவிட்டு, மீண்டும் வரிவிதித்து குடோன்களை கட்டவிருக்கிறார்கள். மக்கள் பணத்தை மத்திய அரசு வீணாகச் செலவு செய்கிறது. இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட்.”

ஆறுபாதி ப.கல்யாணம், தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்:

``இந்தியாவின் 14 கோடி நில உடைமைகளில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதிக்குச் சமமாக விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக இந்த ஆண்டு மொத்த பட்ஜெட்டில் மேலும் கூடுதலாக 2.5 சதவிகித நிதியைச் சேர்க்கக் கோரியிருந்தோம். இது நிறைவேறவில்லை. இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் 34.83 லட்சம் கோடி ரூபாய். பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு 4.78 லட்சம் கோடி ரூபாய். ஆனால் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு 1.23 லட்சம் கோடி ரூபாய். இந்த நிலை தொடர்ந்தால் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். 2021 முதல் 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 50,000 கிராமங்கள் வீதம் பத்து ஆண்டுகளில் இந்த 5 லட்சம் கிராமங்களைத் தற்சார்பு, தன்னிறைவு பசுமை கிராமங்களாக உருவாக்கக் காந்திய பொருளாதார மேதை டாக்டர் ஜே.சி.குமரப்பா திட்டங்கள் அடிப்படையில் தேசிய திட்ட அமலாக்கம், 2015-ம் ஆண்டிலிருந்து கோரி வருவதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை."

சுந்தர்ராஜன், பொறியாளர், பூவுலகின் நண்பர்கள்:

“வேளாண்துறைக்கு 2020-21 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட இந்த ஆண்டு 8% குறைவாக ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.34 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டது, திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 1.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 1.23 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்ஜெட்டில் வெறும் 5 சதவிகிதம் உயர்த்தி மட்டுமே இந்த ஆண்டு வேளாண்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படாது என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் அரசின் வாக்குறுதிக்கு நேர்மாறாக உள்ளது. குறிப்பாக எம்.எஸ்.பி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் எம்.ஐ.எஸ் - பி.எஸ்.எஸ் (MIS-PSS) மற்றும் பி.எம்-ஆஷா (PM-AASHA) என்கிற திட்டங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்து வருகிறது. எம்.ஐ.எஸ் - பி.எஸ்.எஸ் (MIS-PSS)-க்கு இந்த ஆண்டு 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட 25 சதவிகிதம் குறைவு. அதேபோன்று பி.எம்-ஆஷா திட்டத்திற்கு இந்த ஆண்டு வெறும் 400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறையின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான பி.எம்.கிசான் (PM-KISSAN) திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டிலிருந்து 13 சதவிகிதம் குறைவாகும். ஜனவரியில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் இந்தியாவில் 14 கோடி பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் இருப்பதாகவும், இதில் 9 கோடி விவசாயிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் இந்த ஆண்டு அத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நிதி ஒதுக்கப்படவில்லை. PMFBY திட்டத்திற்கு கடந்த பட்ஜெட்டைவிட 4 சதவிகிதம் உயர்த்தி இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

* விவசாயத் துறையில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கை தொடரும்.

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.