ஜூலை - ஆகஸ்ட், 2020: புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

செப். 17, 2020: பா.ஜ.க கூட்டணியிலிருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர், வேளாண் சட்டங்களை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தார். கூட்டணியிலிருந்தும் அந்தக் கட்சி விலகியது.

செப். 15-27, 2020: செப்டம்பர் 15, 18-ம் தேதிகளில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், செப்டம்பர் 20, 22-ம் தேதிகளில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 27-ம் தேதி இந்தச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

செப். 24, 2020: பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

செப். 25, 2020: பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, உ.பி மற்றும் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.

செப். 28, 2020: டெல்லி இந்தியா கேட் அருகில் டிராக்டரைத் தீயிட்டுக் கொளுத்தி பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நவ. 25, 2020: `டெல்லி சலோ’ போராட்டம் தொடங்கியது. டெல்லியை முற்றுகையிட்டன டிராக்டர்கள். போலீஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகை குண்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, தடுத்து நிறுத்த முயன்றனர்.

நவ. 26 - டிச.2, 2020: டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் வலுத்தது.

டிச. 2, 2020: தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தின. அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டிசம்பர் 2-ம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டிச. 3, 2020: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு. குறிப்பிட்ட விவசாயச் சங்கங்களை மட்டும் அழைத்திருந்ததால், அதில் எந்த விவசாயச் சங்கமும் கலந்துகொள்ளவில்லை. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளித்தார்.

டிச. 4, 2020: விவசாயச் சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி. சுற்றுச்சூழலியலாளர் பாபா சேவா சிங் பத்மஸ்ரீ விருதைத் திருப்பியளித்தார்.

டிச. 8, 2020: பல்வேறு மாநிலங்களிலும் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, 35 விவசாயச் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி.

டிச. 9, 2020 - `விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எழுத்து வடிவில் உத்தரவாதம் தருகிறோம்’ என்று அறிவித்தது மத்திய அரசு. விவசாயச் சங்கங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டன.

டிச. 17, 2020: `விவசாயிகள் போராடுவதற்கு முழு உரிமை உண்டு’ என்றது உச்ச நீதிமன்றம். வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்ததை ஏற்க மறுத்துவிட்டது மத்திய அரசு.

டிசம்பர் 20, 2020: போராட்டச் செய்திகளைத் தொடர்ந்து பகிர்ந்த `கிஷான் எக்தா மோர்ச்சா’ ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம். நெட்டிசன்கள் கொதித்தெழுந்ததும், மீண்டும் அது செயல்பாட்டுக்கு வந்தது.

டிசம்பர் 21, 2020: சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

டிச. 29, 2020: கடும் குளிர், உடல்நலக் கோளாறு, சாலை விபத்து, போலீஸாருடனான மோதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

டிச. 30, 2020: ஆறாம்கட்ட பேச்சுவார்த்தையில் மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்னைகளுக்கு மட்டும் தீர்வு காணப்பட்டது.

ஜன. 5, 2021: ஏழாம்கட்ட பேச்சு வார்த்தை தோல்வி.

ஜன. 7, 2020: குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் விவசாயிகள், அதற்கான முன்னோட்டத்தை டெல்லியின் நான்கு எல்லைகளிலும் நடத்தினர்.

ஜன. 8, 2021: இதுவரை சுமார் 70 விவசாயிகள் உயிரிழந்தனர். எட்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி. ஜனவரி 15-ல் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது மத்திய அரசு.

ஜன. 12, 2021: மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.