Election bannerElection banner
Published:Updated:

வேதாரண்யம்: `அப்போ கஜா, இப்போ கொரோனா!' - மாங்காய் விலை கடும் வீழ்ச்சி... கலங்கும் விவசாயிகள்

மாங்காய் விலை வீழ்ச்சி
மாங்காய் விலை வீழ்ச்சி

தற்போது பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமப் பரவி வரும் காரணமாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

வேதாரண்யத்தில் கொரோனா பரவலால் மாங்காய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலைகண்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கத்தரிப்புலம், பெரியகுத்தகை, புஷ்பவனம், தேத்தாகுடி, செம்போடை, நாலுவேதபதி, தாமரைபுலம், குரவப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

மாங்காய்
மாங்காய்

ருமேனியா, செந்தூரா, பங்கணப்பள்ளி, ஒட்டு, நீலம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்கள் இப்பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது மாங்காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன.

தற்போது பனிப்பொழிவு மற்றும் பூச்சித் தாக்குதலால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் காரணமாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு கிலோ மாங்காய் 50 ரூபாய்க்கு மேல் விற்ற நிலைமாறி, படிப்படியாகக் குறைந்து, தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு குறைவாகவே விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாங்காய் விலை வீழ்ச்சி
மாங்காய் விலை வீழ்ச்சி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மாமரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மரங்கள் முறிந்த நிலையில், தற்போது துளிர்விட்டு பூத்து காய்த்து வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் வெளியூர் வியாபாரிகள் மாங்காய் வாங்க வராத காரணத்தால் மாங்காயை விற்க முடியவில்லை.

``அம்மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்" என்பது பழமொழி. அந்த அளவுக்கு தமிழர்களின் உணவில் மாங்காய்க்கு முக்கியத்துவம் உள்ள நிலையில் தற்போது மாங்காய் விலை வீழ்ச்சியால்  மாங்காய் விவசாயிகளின் வாழ்வில் கண்ணீர் வர வைத்துள்ளது. `கஜா புயல் மற்றும் கொரோனா ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கும் மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு