Published:Updated:

ஒலிக்கட்டும் மனசாட்சியின் குரல்!

கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

தலையங்கம்

ஒலிக்கட்டும் மனசாட்சியின் குரல்!

தலையங்கம்

Published:Updated:
கார்ட்டூன்
பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘இடிப்பது பெருமாள் கோயிலை... படிப்பது ராமாயணமா?’

- நம்முடைய பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, பழைய சொலவடையை இப்படி மாற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

சில்லறை வணிகத்துக்கு வேட்டு, ஏழை-எளிய விவசாயிகளுக்கும் வேட்டு என்கிற வகையில் பல்வேறு சட்ட திட்டங்களை அடிக்கடி நிறைவேற்றி உள் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் மட்டுமே பிழைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்கிறார். இன்னொரு பக்கம்... ‘தற்சார்பு’ என்றும் ஓயாமல் முழங்குகிறார்.

தொழில் வளர்ச்சி, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இருக்கின்ற நீர்நிலைகளையெல்லாம் மூடுகிறார். மறுநாளே... ‘சமூகப் பொறுப்பை உணர்ந்து நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, மழைநீரைச் சேமிக்க வேண்டும்’ என்று புல்லரிக்கிறார்.

எட்டுவழிச்சாலை, பன்னிரண்டு வழிச்சாலை என்று வழியிலிருக்கும் காடுகளையெல்லாம் காணாமலடிக்கிறார். கூடவே, ‘விலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று ட்வீட் போடுகிறார்.

எட்டுவழிச்சாலைக்கு 7,000 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகிறது; வனப்பகுதியில் 11 இடங்களில் சாலைகள் அமைக்கப்படவிருப்பதால், காடுகளும் எண்ணற்ற நீர்நிலைகளும் அழிக்கப்படவிருக்கின்றன; பெங்களூரு-சென்னை புதிய விரைவு சாலைக்காக மட்டுமே 1,35,000 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இவற்றையெல்லாம் சொல்வது நாமல்ல, இந்த அரசாங்கத்தின் ஆய்வறிக்கைகளேதான்!

அதேசமயம்... உலக நீர் நாள்... உலக வன நாள்... என வரும்போதெல்லாம் இப்படி உணர்ச்சிகரமாக ஒலிக்கிறது மோடியின் ‘உதட்டின் குரல்’. உண்மையான ‘மனதின் குரல்’ என்பதாக அது இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். ‘ஆட்சி என்கிற பெயரில் நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்துமே சரிதானா... முந்தைய காங்கிரஸ் அரசு கார்ப்பரேட்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்தியதுபோல, நாமும் ஆட்சி நடத்துவது முறைதானா, இந்தியா போன்ற முழுமையான விவசாய நாட்டை இப்படியெல்லாம் கூறுபோடுவது நியாயம்தானா?’ என்றெல்லாம் ஒலிக்கட்டும் அவருடைய மனசாட்சியின் குரல்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஒலிக்கட்டும் மனசாட்சியின் குரல்!