Published:Updated:

கிலோ 7 ரூபாய்க்கு கொய்யா கொள்முதல்; பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்! தொடரும் சோகம்... தீர்வு என்ன?

கொய்யா மரக்கன்று

விளைச்சலிருந்தும் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லாத அளவுக்குத்தான் மார்க்கெட்டில் விலை உள்ளது. கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி பாடுபட்ட பழங்கள்‌ கடைசியாக குளிர்பான கம்பெனியில் கொய்யா பானம் தயாரிப்பதற்காக கிலோ 7 ரூபாய் என அவர்கள் கேட்ட சொற்ப விலைக்கே கொடுத்திருக்கிறோம்...

கிலோ 7 ரூபாய்க்கு கொய்யா கொள்முதல்; பெரும் நஷ்டத்தில் விவசாயிகள்! தொடரும் சோகம்... தீர்வு என்ன?

விளைச்சலிருந்தும் விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லாத அளவுக்குத்தான் மார்க்கெட்டில் விலை உள்ளது. கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி பாடுபட்ட பழங்கள்‌ கடைசியாக குளிர்பான கம்பெனியில் கொய்யா பானம் தயாரிப்பதற்காக கிலோ 7 ரூபாய் என அவர்கள் கேட்ட சொற்ப விலைக்கே கொடுத்திருக்கிறோம்...

Published:Updated:
கொய்யா மரக்கன்று

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அதிக கொய்யா விளைச்சல் இருந்தும், அதற்கேற்ற விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கொய்யா சாகுபடி விவசாயி கார்த்திக்கிடம் பேசினோம். ``வத்திராயிருப்பு தாலுகா மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந் துள்ளதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களான எஸ்.இராமச்சந்திராபுரம், வ.மீனாட்சிபுரம், கான்சாபுரம், அத்திக்கோயில், நெடுங்குளம், தாணிப்பாறை, பிளவக்கல், கோட்டையூர், இலந்தைகுளம் உள்ளிட்ட இடங்களில் தோட்டப்பயிர் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது.

கொய்யா
கொய்யா

குறிப்பாக, இப்பகுதியில் விளையக்கூடிய நாட்டு ரக கொய்யா அதிக சுவையுடையதாக இருக்கும். ரசாயன தெளிப்பின்றி இயற்கையான முறையில் பழுத்த பழமாகவும் கிடைப்பதால் இப்பகுதியிலிருந்து விற்பனைக்காக சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் நேரடியாக கொய்யாவை வாங்கிச் செல்வர். விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே, கொள்முதலாளர்கள் வாங்கிச் செல்வதால் இடைத்தரகர் பிரச்னையும் தவிர்க்கப்பட்டு வந்தது.

இங்கு விளையும் கொய்யப்பழங்கள் பெரும்பாலும் கேரளாவுக்கே விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் வத்திராயிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் சில்லறை வியாபாரத்துக்காகவும் கொடுக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆண்டு அதிக பூச்சித் தாக்குதல் இல்லாமல் பருவமழை, இயற்கை என ஒத்துழைப்பு சரியாக இருந்ததால் எதிர்பார்த்ததை விட கொய்யா விளைச்சல் அதிகம் இருந்தது. இதனால் விவசாயிகள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் அடைந்தோம்.

ஆனால், சந்தை நிலவரம் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு நேரெதிராக இருந்தது. கொய்யாவுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகூட இல்லாதது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

கொய்யா
கொய்யா

உள்ளூர் மற்றும் வெளியூர் என இரண்டு பக்கமும் கொய்யாவுக்கு நியாயமான விலை கிடைக்காததால் நாங்கள் நம்பியிருந்தது வெளிமாநில வியாபாரிகளைத்தான்.

ஆனால், 1500 கிலோ பழத்தை விற்பனைக்குக் கொண்டு வந்ததில் வெறும் 60 கிலோ பழங்கள் மட்டும் வெளிமாநிலத்துக்குக் கேட்டதால் அதிலும் எங்களுக்கு பெரும் நஷ்டமே. இந்தவாரம் விவசாயிகளிடமிருந்து அதிகபட்சமாக கொய்யாப் பழம் கிலோ 10 ரூபாய்க்கு விலைபோயுள்ளது. ஆனால், இதே பழத்தை வியாபாரிகள் கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதே பழம் வெளிமாநிலத்தில் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஆகவே, விளைச்சலிருந்தும், விவசாயிகளுக்கு எந்தவித லாபமும் இல்லாத அளவுக்குத்தான் மார்க்கெட்டில் விலை உள்ளது. கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி பாடுபட்ட பழங்கள்‌ கடைசியாக குளிர்பான கம்பெனியில் கொய்யா பானம் தயாரிப்பதற்காக கிலோ 7 ரூபாய் என அவர்கள் கேட்ட சொற்ப விலைக்கே கொடுத்திருக்கிறோம்.

கொய்யா
கொய்யா

இன்னும் சிலர், பறித்த பழங்களை ஆடு மாடுகளுக்கு தீவனத்துக்காக கொட்டிவிட்டுச் சென்ற கொடுமைகளும் நேர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியிருக்கிறோம். இதுதவிர பறிப்புக்கான கூலி, உரம், கவாத்து செலவு, வேலையாட்களுக்கு சம்பளம் எனப் பலதரப்பட்ட நெருக்கடிகளும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, கொய்யா விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் கொய்யா கூழ் தயாரிக்கும் ஆலையைத் தமிழக அரசு நிறுவி விவசாயிகளிடம் நேரடியாகக் கொய்யா கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே விவசாயிகளின் நலனை பாதுகாக்க முடியும்'' என்றார்.