Published:Updated:

விவசாயிகளுக்கான ``கால்நடை மருத்துவர் செயலி” முக்கிய அம்சங்கள் என்ன?

கால்நடை மருத்துவர் செயலி

இந்த செயலி மூலம் விவசாயிகள், செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அவற்றுக்கு சிகிச்சைக்கு முன்பதிவு செய்யவும், தடுப்பூசிகளைக் கோரவும் முடியும். மேலும், இந்தச் செயலியில் உள்ள காணொளி மூலம் கால்நடைகளுக்கு முதலுதவி தொடர்பான அறிவுரைகளை மருத்துவர்கள் மூலம் பெற முடியும்.

விவசாயிகளுக்கான ``கால்நடை மருத்துவர் செயலி” முக்கிய அம்சங்கள் என்ன?

இந்த செயலி மூலம் விவசாயிகள், செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அவற்றுக்கு சிகிச்சைக்கு முன்பதிவு செய்யவும், தடுப்பூசிகளைக் கோரவும் முடியும். மேலும், இந்தச் செயலியில் உள்ள காணொளி மூலம் கால்நடைகளுக்கு முதலுதவி தொடர்பான அறிவுரைகளை மருத்துவர்கள் மூலம் பெற முடியும்.

Published:Updated:
கால்நடை மருத்துவர் செயலி

இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களைப் பெற தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை சார்பில் புதிதாக `கால்நடை மருத்துவர் செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில், `கால்நடை மருத்துவர் செயலி’யை, கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவர் செயலி
கால்நடை மருத்துவர் செயலி

விவசாயிகள், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், மற்றும் கால்நடை தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு இந்தச் செயலி பெரிதும் பயன்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தச் செயலி மூலம் விவசாயிகள், செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அவற்றுக்கான சிகிச்சைக்கு முன்பதிவு செய்யவும், தடுப்பூசிகளைக் கோரவும் முடியும். மேலும், இந்தச் செயலியில் உள்ள காணொளி மூலம் கால்நடைகளுக்கு முதலுதவி தொடர்பான அறிவுரைகளை மருத்துவர்கள் மூலம் பெற முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செயலியை எப்படி பயன்படுத்துவது

 செயலியின் முகப்பு பக்கத்தில் கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணி வளர்ப்போர், கால்நடை தொழில் முனைவோர், களஞ்சியம், கால்நடை மருத்துவர் மற்றும் உழவன் செயலிக்கான முகப்பு என 6 பிரிவுகள் உள்ளன.

கால்நடை வளர்ப்போர்

கால்நடை வளர்ப்போர் பிரிவில், பசு, எருமை, ஆடு, கோழி மற்றும் குதிரை எனத் தனித்தனியாகக் கால்நடைகளின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கால்நடைகளை க்ளிக் செய்து உள்நுழையும்போது, உங்கள் அருகில் உள்ள மருத்துவரின் பெயர், தூரம், முகவரி எனத் தகவல்களைப் பெற்றிடலாம்.

கால்நடை மருத்துவர் செயலி
கால்நடை மருத்துவர் செயலி

செல்லப்பிராணி வளர்ப்போர்

இப்பிரிவில் பூனை, நாய், அயலின பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் மற்றும் ஆய்வக விலங்கு அலோசகர் போன்ற பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.

கால்நடை தொழில்முனைவோர்

இந்தப் பிரிவில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதலாவதாக, பண்ணை ஆலோசகர், இரண்டவதாக பொருளாதார அறிவுரைகள் மற்றும் மூன்றவதாக விரிவாக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.

களஞ்சியம்

இதில் கால்நடை பராமரிப்பு முறைகள், அரசாணைகள், இதழ்கள், செய்திகள், மற்றவை எனப் பல்வேறு முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவர்

விலங்கு தொழில்முனைவோர் வங்கிக் கடன்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதில் மருத்துவர்களின் ஆதரவைப் பெறலாம். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு , உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற விலங்குகளின் விவசாயம் பற்றிய பொதுவான தகவல்களும் கால்நடை மருத்துவர் செயலியில் கிடைக்கும் எனக் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உழவன் செயலி

இதுவரை உழவன் செயலி அறிந்திராதவர்களுக்காக, இந்த முகப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் சிறப்புத் திட்டங்கள், அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள் பராமரிப்பு மற்றும் பண்ணை அமைத்தல் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கால்நடை மருத்துவர் செயலி
கால்நடை மருத்துவர் செயலி

தமிழகத்தில் போலி கால்நடை மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், இந்தச் செயலியில் அரசு பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களின் முழு விவரங்கள் உள்ளன. 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தச் செயலி மூலம் மருத்துவ சேவையில் இணைந்துள்ளனர்.

இதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 400 முதல் 450 கால்நடை மருத்துவர்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படவில்லை.