தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்திருக்கும் ‘தமிழ்நாட்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கை 2020-21’-ஐ தமிழக அரசின் தலைமைச் செயளாளர் கே.சண்முகம் அண்மையில் நடைபெற்ற மாநில கடன் கருத்தரங்கில் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நபார்டு தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன், “முன்னுரிமைக் கடன் பிரிவின்கீழ் மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் கடன் திட்டமிடுதலுக்கு உதவும் வகையில், மாவட்டவாரியாகக் கடன் மதிப்பீட்டுத் திட்டங்களை (Potential Linked Credit Plan) நபார்டு கடந்த பல்லாண்டுகளாகத் தயாரித்துவருகிறது. வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 2020-21-ம் ஆண்டுக்கான மாவட்டவாரியாகச் செய்யப்பட்ட மதிப்பீடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநில கடன் மதிப்பீட்டு அறிக்கை (State Focus Paper) தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு 2020-21-ம் ஆண்டுக்கான நபார்டின் கடன் மதிப்பீடு 2,45,629 கோடி ரூபாயாக உள்ளது. இது 2019-20-க்கான (ரூ.2,26,906 கோடி) மதிப்பீட்டை விட 8.25% அதிகம். இதில், விவசாயத் துறைக்கான கடன் 1,33,006 கோடியும் (54%), `எம்.எஸ்.எம்.இ’ எனப்படும் குறு, சிறு மற்றும் மத்திய தொழில்துறைக்கான கடன் ரூ.46,899 கோடியும் அடங்கும். இவற்றைத் தவிர, மாநில மற்றும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட கொள்கைத் தலையீடுகள் மற்றும் திட்டங்களையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

நிகழ்வில் ‘கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள்-தமிழ்நாடு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. நிதிசார் கல்வியில் சிறப்பாகப் பணியாற்றிய பொதுத்துறை வங்கிகள், கிராமிய மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பாகச் செயல்படும் நீர்வடிப் பகுதி மேம்பாடு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அரசுதுதுறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.