Published:Updated:

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

திட்ட தொடக்க நிகழ்வில் ( facebook )

இதன் முக்கிய நோக்கம், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதே. இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

இதன் முக்கிய நோக்கம், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதே. இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Published:Updated:
திட்ட தொடக்க நிகழ்வில் ( facebook )

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசியவர், ``கலைஞர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அனைத்து சமூக மக்களின் வளர்ச்சிக்காகவும் போராடினார். அதோடு உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்.

நிகழ்வில்
நிகழ்வில்

தற்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக நான் வகுத்து கொண்டிருக்கும் ஏழு அம்ச தொலை நோக்குத் திட்டங்களில் ஒன்றான, `மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி' என்பதை நடைமுறைப்படுத்த, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதே. இந்தத் திட்டத்தை 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

227 கோடி ரூபாய் செலவில் 1,997 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுவதற்காக இத்திட்டத்தை இன்றைக்குத் தொடங்கி வைக்கிறேன்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டுவருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளை பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாகப் பண்ணைக்குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு-குறு உழவர்களுக்குச் சான்று வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல். பாசன நீர்வழித் தடங்களைத் தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிகழ்வில்
நிகழ்வில்

மேலும் கிராம அளவில், அரசினுடைய அனைத்து நல திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகள் பயன் பெரும் வகையில் செயல்படுவதே இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

மேலும், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடைய செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism