Published:Updated:

2023 சிறுதானியங்கள் ஆண்டில் செய்ய வேண்டியவை என்ன? வேளாண் வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களைத் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்...

2023 சிறுதானியங்கள் ஆண்டில் செய்ய வேண்டியவை என்ன? வேளாண் வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை!

கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களைத் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்...

Published:Updated:
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என்று ஐ.நா அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய அரசும் சிறுதானியங்களில் உள்ள நன்மைகளை மக்கள் அறிந்துகொள்ளும்படி, அதற்கான விழிப்புணர்வை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

சிறுதானியங்கள்
சிறுதானியங்கள்

சிறுதானியங்களை விளைவித்த பிறகு, அவற்றை மதிப்புக்கூட்டு பொருள்களாக மாற்றவும், உள்நாட்டில் சிறுதானியங்களை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்கவும், சர்வதேச அளவில் நம்மூர் சிறுதானியங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில், அவற்றை பிராண்ட் பொருள்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அறிவிப்பு வெளியிட்டார்.

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளதையொட்டி, மறக்கப்பட்ட பழைமையான தானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை பல்வேறு முன்னெடுப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிறுதானிய ஸ்டார்ட்அப் புத்தாக்க சவால் செப்டம்பர் 10  அன்று தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது சிறுதானிய சுற்றுச் சூழல் அமைப்பில் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப, வணிக தீர்வுகளை வழங்க இளைஞர்களை ஊக்குவிக்கிறது. இந்தப் போட்டி நிகழ்ச்சி 2023 ஜனவரி 31 வரை நடைபெறும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

இந்நிலையில், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய விளம்பரப்பணிகள் குறித்து, நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்காச்சோளம் தவிர்த்து இதர சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை துறையின் அனைத்து தலைவர்கள், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, சமூக நலம், ஊரக வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகள் மூலமாக 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களுக்கு மாதாந்தர வாரியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது.

விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல்...

தற்போது பொது மக்களிடையே அரிசி உணவு அதிகரித்து, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டதால், சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. குறைந்த வயது, அதிக ஊட்டச்சத்து, வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை மற்றும் பூச்சி நோய் அதிகம் தாக்காத நிலை போன்ற காரணங்களால், மானாவாரி நிலங்களில், சிறுதானியங்களைச் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட இயலும். ஆனால், உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்புக்கூட்டி, பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்வதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளதை தலைமைச் செயலாளர் சுட்டிக் காட்டினார்.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு

எனவே, கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங் களுக்குத் தேவையான சிறுதானியங்களைத் தமிழக விவசாயி களிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கும் அனைத்து துறைகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

சிறுதானியங்களில் ஆராய்ச்சி பணி என்பது குறைந்து வருவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுதானிய ஆராய்ச்சியில், கூடுதல் கவனம் செலுத்தி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், தானியங்களின் சேமிப்புக் காலத்தைக் கூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருள்களின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தலைமைச் செயலாளரரை பல்கலைக் கழக விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்கள்.

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் மேம்பட பொதுமக்களிடையே தேவையை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்துறை அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார் உள்ளிட்ட பல்வேறு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.