Published:Updated:

காஷ்மீரில் விவசாயத்தைச் சார்ந்துள்ள 80% மக்களின் நிலை இனி?

ஜெயகுமார் த

கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் இங்கே விவசாயம் செய்யப்படுகிறது.

காஷ்மீர் விவசாயம்
காஷ்மீர் விவசாயம்

இந்திய எல்லைக்குள் இருந்தாலும் கிட்டத்தட்டத் தனி நாடாகவே செயல்பட்டு வந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த, சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சத்தம், ராணுவ அணிவகுப்பு என எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் காஷ்மீரில் விவசாயம்தான் முக்கியத்தொழில். கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் விவசாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'இனி, காஷ்மீர் என்னவாகும்' என்பது குறித்துச் சிலரிடம் பேசினோம். https://bit.ly/2Mev4g9

காஷ்மீரில் உள்ள அரசு அதிகாரியிடம் பேசியபோது, "ஆறுகள் ஓடி ஓடி அந்த மண் வளமாகியுள்ளது. பெரிய அளவில் மாசடையாத அதேசமயம் சீரழியாத நிலங்கள், காஷ்மீரில்தான் உள்ளன. இதனால்தான் காஷ்மீர் ஆப்பிள், குங்குமப்பூ, பாஸ்மதி அரிசி, பாதாம், வால்நட், மலர்கள் ஆகியவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. அதேபோல ஆட்டு ரோமங்களில் தயாரிக்கப்படும் கம்பளியும் சிறப்பு வாய்ந்தது. இப்படிக் காஷ்மீர் மண்ணுக்கே உரித்தான சிறப்புகள் இருந்து வருகின்றன.

எந்தத் தடையுமின்றி இந்திய முதலாளிகள் அனைத்துப் பாதுகாப்புகளுடனும் அங்கே கடை விரிப்பர். நிலங்களை வாங்கிக் குவிப்பர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் இங்கே விவசாயம் செய்யப்படுகிறது. காய்கறிகள், மலர்கள் என்று தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியில் காஷ்மீர் மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுவரை காஷ்மீரிகளுடைய நிலம் காஷ்மீரிகளின் கையில் மட்டும் இருந்தது. இனி அப்படி இருக்காது. தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் நிறைய உருவாகும். எரிவாயு, கனிமங்கள் என ஏதாவதொன்றை எடுக்க திட்டங்கள் தீட்டப்படும்" என்றார்.

எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸிடம் பேசினோம். "இன்று நமது அரசியல் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில், 260 பிரிவுகள் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மீதமுள்ள 135 பிரிவுகள் ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தில் பொதுவாக உள்ளன. அப்படியிருந்தும் அந்த மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் விவசாயத்தைச் சார்ந்துள்ள 80%
மக்களின் நிலை இனி?

இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள இந்த சட்ட மசோதா, குறியீட்டு ரீதியில் 'எந்த வாக்குறுதியும் காஷ்மீர் மக்களுக்கு இல்லை' என்பதை உறுதி செய்துள்ளது. இனி எந்தத் தடையுமின்றி இந்திய முதலாளிகள் அனைத்துப் பாதுகாப்புகளுடனும் அங்கே கடை விரிப்பர். நிலங்களை வாங்கிக் குவிப்பர். பெரிய அளவில் பிற மாநிலத்தவரின் குடியேற்றங்கள் நிகழலாம். ஒரு மாநிலத்தவர் பிற மாநிலங்களில் குடியேறுவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு மாநிலத்தவரின் நிலம், பிற மாநிலத்தவர்களுக்குச் சென்றால் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்" என்றார்.

- 'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்?' எனும் சிறப்புக் கட்டுரையை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/government-and-politics/the-fate-of-farming-in-kashmir

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/