Published:Updated:

கோதுமை ஏற்றுமதி தடை; ஜி.7 நாடுகள் கண்டனத்துக்கு இந்தியா சொல்லும் பதில் இதுதான்!

கோதுமை

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடைக்கு ஆதரவு தெரிவித்த சீன நாட்டின் ஊடகம் ஒன்று, ஜி 7 நாடுகள் தங்களின் கோதுமை ஏற்றுமதியை ஏன் அதிகரிக்க கூடாது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

கோதுமை ஏற்றுமதி தடை; ஜி.7 நாடுகள் கண்டனத்துக்கு இந்தியா சொல்லும் பதில் இதுதான்!

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடைக்கு ஆதரவு தெரிவித்த சீன நாட்டின் ஊடகம் ஒன்று, ஜி 7 நாடுகள் தங்களின் கோதுமை ஏற்றுமதியை ஏன் அதிகரிக்க கூடாது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Published:Updated:
கோதுமை

உலக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் கோதுமையை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மீதான கோதுமை ஏற்றுமதி குறித்த எதிர்பார்ப்புகள் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

Export
Export

அதாவது தனியார் வர்த்தககர்களால் கோதுமை ஏற்றுமதி அதிகரித்ததை தொடர்ந்து, உள்நாட்டில் கோதுமையின் விலை உயர்ந்தது. அதுமட்டுமில்லாமல் உலக சந்தைகளில் கோதுமையின் விலை உயர்ந்ததால், கோதுமையால் செய்யப்படும் உணவு பொருட்களான பிரட், கேக், நூடுல்ஸ், பாஸ்தாவின் விலையும் கணிசமாக உயர்ந்தது. தனியார் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படும் கோதுமை ஏற்றுமதியை தவிர்க்க ஒன்றிய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோதுமை
கோதுமை

சர்வதேச நாடுகளின் தேவையை உணர்ந்தும் இந்தியா தற்போது கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், ஜி 7 நாடுகள் (ஜி 7 என்பது உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு) இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 'எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் அல்லது சந்தைகளை மூடினால், அது நெருக்கடியை மோசமாக்கும்' என்று ஜெர்மனி நாட்டின் உணவு மற்றும் வேளாண் அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்தியா அரசு அதிகாரிகள் 'இந்தத் தடை நிரந்தரமானது அல்ல, திருத்தி அமைக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடைக்கு ஆதரவு தெரிவித்த சீன நாட்டின் ஊடகம் ஒன்று, 'ஜி 7 நாடுகள் தங்களின் கோதுமையை ஏன் ஏற்றுமதி செய்யக் கூடாது?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism