Published:Updated:

`இப்படி செஞ்சா மண்தான் உரம், பூச்சி விரட்டி எல்லாமே!' - மோடி பாராட்டிய தெலங்கானா விவசாயி

தெலங்கானா விவசாயி

அனைத்துப் பயிர்களிலும் உள்ள ஊட்டச்சத்துகளை இயற்கை வழிமுறைகள் மூலம் அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார். இவருடைய செயல்தான் பிரதமர் மோடியை, வெங்கட் ரெட்டி பற்றிப் பேச வைத்திருக்கிறது.

`இப்படி செஞ்சா மண்தான் உரம், பூச்சி விரட்டி எல்லாமே!' - மோடி பாராட்டிய தெலங்கானா விவசாயி

அனைத்துப் பயிர்களிலும் உள்ள ஊட்டச்சத்துகளை இயற்கை வழிமுறைகள் மூலம் அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார். இவருடைய செயல்தான் பிரதமர் மோடியை, வெங்கட் ரெட்டி பற்றிப் பேச வைத்திருக்கிறது.

Published:Updated:
தெலங்கானா விவசாயி

சமீபத்தில், `மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது தெலங்கானாவைச் சேர்ந்த சிந்தலா வெங்கட் ரெட்டி எனும் இயற்கை விவசாயியைப் புகழ்ந்து பேசினார். அதற்கு காரணம் இதுதான். ஒரு விவசாயி, பூச்சிகளை விரட்டும் தொழில்நுட்பத்துக்குக் காப்புரிமை வாங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? வெங்கட் ரெட்டி அதைச் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல. இயற்கை விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தியதற்காகப் பத்மஸ்ரீ விருதும் வாங்கியிருக்கிறார்... இதெல்லாம் எப்படி நடந்தது?

வெங்கட் ரெட்டி
வெங்கட் ரெட்டி

"வெளியிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நைட்ரஜன், ஃபாஸ்பரஸ், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் - அனைத்தும் மண்ணிலேயே இருக்கின்றன. பயிர் மழையில் நனையும்போது மண்ணிலிருந்து வெளிப்படும் சத்துக்களும் மணமும் பயிருக்குச் சிறந்த சுவையைத் தருகிறது" என்று குறிப்பிடுகிறார் வெங்கட் ரெட்டி.

வெங்கட் ரெட்டி, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அல்வால் பகுதியில் பிறந்தார். வெங்கட் ரெட்டி பள்ளிக் காலத்திலும் விவசாய வேலைகளில் தன் தந்தைக்கு உதவியாக இருந்திருக்கிறார். 1969-ம் ஆண்டு பி.யு.சி முடித்த பிறகு, அவர் கல்லூரியில் சேர விண்ணப்பித்து, பின்னர் கல்வியைத் தொடர முடியாமல் விவசாயத்தில் நுழைந்தார்.

1982-ம் வருஷம் அவர் தோட்டம் இருக்கும் பகுதியில் கடுமையான வறட்சி. தண்ணீர் இல்லாமல் விவசாயம் தடுமாற ஆரம்பித்தது. இவரும் ஒரு கிணறு வெட்டினார். சேறு கலந்த தண்ணீர் வயலில் பாய்ந்தது. தண்ணீரோடு சேர்ந்து வரும் சேற்று மண், கொடிகளை வளர்க்கிறது என்பதை உணர்ந்தார் ரெட்டி. ‘மண்ணை உரமாகவும், பூச்சிகளை விரட்டவும் ஏன் பயன்படுத்தக் கூடாது’ என யோசித்தார். அதன் பின்னர் பலகட்ட சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2002-ம் ஆண்டில் மண்ணை வைத்து பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்க்கும் எண்ணம் இவருக்கு வந்தது. நண்பர் ஒருவரின் மலர்த் தோட்டத்தைப் பார்வையிடும்போது, மண் சத்துக்களின்றி இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார். இறந்த மண்ணை அகற்றிவிட்டு புதிய மண்ணை பரப்ப யோசனை சொல்லியிருக்கிறார். நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. தனது நிலத்திலும் இவ்வாறு செய்ய, அது ரெட்டிக்கும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இம்முறையில் நல்ல பலன் கிடைத்தாலும், ஒவ்வொரு முறையும் வெளியிலிருந்து மண்ணைப் பெறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

அதனால் வெங்கட் ரெட்டி தனது தோட்டத்தில் குழிகளை எடுத்து நிலத்தின் கீழ் அடுக்கு மண்ணை எடுத்து, பரப்பிப் பயன்படுத்தினார். பயன்படுத்தியது போக மீதமுள்ள மண்ணை எதிர்கால பயன்பாட்டுக்காக உலர வைத்துப் பாதுகாத்தார். இந்தச் செயல்முறையின் மூலம், நெல் சாகுபடி மேற்கொள்ளும்போது இயற்கை உரங்களைப் பயன்படுத்தினார். அப்போது நல்ல மகசூல் கிடைத்தது. இவரது நிலத்தைப் பார்வையிட்ட வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் பத்ம ராஜு ஜெனீவாவின் சர்வதேச காப்புரிமை அமைப்பில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்குமாறு இவரிடம் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்.

வெங்கட் ரெட்டி
வெங்கட் ரெட்டி

2004-ம் ஆண்டு ஐ.சி.ஏ.ஆர் அமைப்பில் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். எட்டு மாதங்களுக்குப் பின்னர், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 18 மாதங்கள் கழித்து அவர்களது வலைதளத்தில் காப்புரிமை தொடர்பான விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் வெங்கட் ரெட்டியின் நிலத்தைப் பார்வையிட்டார். அதன் பின்னர், ஒரு மாதம் கழித்து அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூம், வெங்கட் ரெட்டியைச் சந்தித்து வாழ்த்தியிருக்கிறார்.

வறட்சி நிலவிய காலத்தில் கிணறுகளை ஆழமாகத் தோண்டி, சேற்று நீரைப் பயிர்களுக்குத் திருப்பி விடும் வழக்கம் முன்பு நடைமுறையிலிருந்தது. அத்தகைய நீரைப் பயன்படுத்தும்போது விளைச்சல் இயல்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இவரும் அதேபோலச் செய்தார். ஆரம்பத்தில் கிணற்று நீர் காரணமாகவே நல்ல மகசூல் கிடைத்ததாக நம்பியிருக்கிறார். கிணற்றில் உள்ள மண்ணால்தான் இந்த அதிசயம் ஏற்படுகிறது என்பதைப் பின்னர்தான் உணர்ந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2014-ம் ஆண்டு வெங்கட் ரெட்டி வறண்ட மண்ணைத் தெளிக்கும் பரிசோதனையை நடத்தினார். கால்நடை தீவனத்துக்காக வளர்க்கப்பட்டு வரும் சோளப் பயிரில், உலர்ந்த மண் கலந்த தண்ணீரைத் தெளித்தார். தண்ணீரைச் சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால், மண் கீழே சென்றுவிடும். மேலே உள்ள நீரைப் பயிர்களுக்குத் தெளித்திருக்கிறார். சோளப் பயிர் நன்றாக வளர்ந்திருக்கிறது. இரண்டு நாட்களில், பயிரிலிருந்த பூச்சிகளும் மறைந்திருக்கின்றன. வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முயற்சி பூச்சிகளை விரட்டப் பயன்பட்டதில் வெங்கட் ரெட்டி அதிக மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.

வெங்கட் ரெட்டி
வெங்கட் ரெட்டி

வெங்கட் ரெட்டி கடைப்பிடிக்கும் தொழில்நுட்பம் இதுதான்!

நிலத்தில் இருக்கும் மேல் மண்ணை 15 கிலோ எடுத்துக் காய வைக்க வேண்டும். 4 அடி ஆழத்திலிருந்து 15 கிலோ மண்ணை எடுத்து அதைத் தனியாகக் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும், இரண்டு மண்ணையும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் எதுவும் செய்யாமல் விட்டு விட வேண்டும். இப்போது, அடிப்பகுதியில் மண், சேறு மாதிரி மண்டியிருக்கும். பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரைச் சேறு கீழே படிந்த 4 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை, ஸ்பிரேயர் மூலம் பயிரில் தெளிக்கலாம். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பூச்சித் தொல்லை இருக்காது. அடியில் படிந்த மண்ணைப் பயிரின் வேர் அருகே உரமாகவும் கொடுக்கலாம் என்பதுதான் ரெட்டியின் கண்டுபிடிப்பு.

தான் மாணவனாக இருந்தபோது, பூச்சிகள் மற்றும் புழுக்களுக்குக் கல்லீரல் இல்லாததால், மண் செரிமானம் ஆகாது. எனவே, மண் ஒரு நல்ல பூச்சிக்கொல்லியாக செயல்படுமே என யோசித்திருக்கிறார். வெட்டுக் கிளிகளின் தாக்குதலையும் மண் கரைசல் குறைத்திருக்கிறது. அனைத்து பயிர்களிலும் உள்ள ஊட்டச்சத்துகளை இயற்கை வழிமுறைகள்மூலம் அதிகரிக்க முடியும் என்று நம்புகிறார். இவருடைய செயல்தான் பிரதமர் மோடியை, வெங்கட் ரெட்டி பற்றிப் பேச வைத்திருக்கிறது. பிற மாநிலங்களிலிருந்தும் கூட விவசாயிகள் பலர் அவரைத் தொடர்பு கொண்டு தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism