Published:Updated:

சந்தன மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகுமா ? உண்மை இதுதான்!

சந்தன மரங்கள்

உலக அளவில் நல்ல விலை மதிப்பு கொண்ட மர வகைகளில் சந்தன மரங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதன் விலைமதிப்பால் கூட இந்த சந்தன மரத்தை வளர்த்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கலாம்.

சந்தன மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகுமா ? உண்மை இதுதான்!

உலக அளவில் நல்ல விலை மதிப்பு கொண்ட மர வகைகளில் சந்தன மரங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதன் விலைமதிப்பால் கூட இந்த சந்தன மரத்தை வளர்த்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கலாம்.

Published:Updated:
சந்தன மரங்கள்

பொதுவாக வீடுகளில் மரங்களை வளர்ப்பது காலந்தோறும் இருந்து வரும் ஒரு நல்ல பண்பு. சொல்லப்போனால் வீட்டுக்கு அருகில் மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்திருந்தன. நகரமயமாக்கம் பெருக ஆரம்பித்த பிறகு புதிதாக வீடு கட்டுபவர்கள் வீட்டைச் சுற்றியோ, வீட்டின் அருகிலோ தங்களுக்கு பிடித்த மரங்களை நட்டு வளர்ப்பது அதிகரித்து வருகிறது. அதிலும் விலையுயர்ந்த சந்தன மரங்களை நடுவது விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. ‘சந்தன மரங்களை நட்டால் வீட்டில் செல்வம் பெருகும்’ என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் பரவலாக இருந்து வருகிறது.

சந்தன மரங்கள்
சந்தன மரங்கள்

இது உண்மையா? என்பது குறித்து பெங்களூரில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி சுந்தர்ராஜனிடம் கேட்டோம். “பொதுவாக வீட்டின் அருகே மரம் வளர்ப்பது நல்ல விஷயம். காரணம் பச்சை நிறம் மனிதனை சாந்தப்படுத்தும் என்று ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். காலையிலே எழுந்தவுடன் ஒரு நிமிடம் பச்சை நிற இலைகளைக் கொண்ட மரத்தைப் பார்த்தால் மனம் ஒருமுகப்படும். அமெரிக்காவில் மருத்துவமனைகளைச் சுற்றி மரங்களை வளர்க்கிறார்கள். அந்த மரங்களை நோயாளிகளைப் பார்க்க சொல்கிறார்கள். இதனால் நோய் விரைவில் குணமாவதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் வீட்டின் அருகிலோ, வீட்டைச் சுற்றியோ மரங்களை வளர்ப்பது நல்ல விஷயம். நம் முன்னோர்களே வீட்டின் அருகே வேப்ப மரங்கள் உள்ளிட்டவற்றை வளர்த்தார்கள். அதை தெய்வீகமாகவும் பார்த்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வரிசையில் இன்று சந்தன மரங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. சந்தன மரங்களை வீட்டின் அருகில் வளர்க்கலாம். களிமண் அல்லாத அனைத்து வகையான மண்ணிலும் வளரும். குறிப்பாக செம்மண் மற்றும் கற்கள் நிறைந்த செம்மண்ணில் நன்றாக வளரும். அதேசமயம் தண்ணீர் தேங்காத நிலமாக இருக்க வேண்டும். இதை வளர்ப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இந்த மரத்தை வெட்ட வேண்டும் என்றால்தான் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். மரத்தை நட்டுவிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சொல்லி அடங்கலில் சேர்த்துவிட வேண்டும். இது வெட்டும்போது வனத்துறையிடம் அனுமதி வாங்குவதற்கு உதவியாக இருக்கும். கர்நாடக மாநிலத்தில் இன்றைய சந்தை மதிப்பில் ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 12,500 ரூபாய் விலை போகிறது. சுமார் 30 ஆண்டுகள் ஆன ஒரு மரம் மண்ணின் தன்மையைப் பொறுத்து 70-100 கிலோ எடை வரும்.

சந்தன மரங்கள்
சந்தன மரங்கள்

அந்த வகையில் நன்கு வளர்ந்த சந்தன மரங்கள் பல லட்சங்களில் விற்பனையாகிறது. கர்நாடகாவில் பல விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் சந்தன மரங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். தமிழகத்திலும் ஆங்காங்கே விவசாயிகள் சந்தன மரங்களைத் தோட்டங்களில் சாகுபடி செய்து வருகிறார்கள். உலக அளவில் அதிக விலை மதிப்பு கொண்ட மர வகைகளில் சந்தன மரங்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதன் விலைமதிப்பால்கூட இந்த சந்தன மரத்தை வளர்த்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை வளர்ந்திருக்கலாம். இதுவொரு மனம் சார்ந்த நம்பிக்கையே தவிர இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.

ஏதோவொரு விதத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் சரி. ஏனென்றால் ஒரு மரம் தன் வாழ்நாளில் இரண்டு பேர் சுவாசிக்கக்கூடிய அளவுக்கு ஆக்ஸிஜனை தருகிறது. சந்தன சந்தன மரங்களைத்தான் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வன விரிவாக்கக் கோட்டம், ஈஷா நர்சரிகளில் குறைந்த விலைக்கு சந்தன மரக்கன்றுகள் கிடைக்கின்றன.

சுந்தரராஜ்
சுந்தரராஜ்

இந்த சந்தன மரங்களை வளர்ப்பதற்கு எந்தவித ரசாயன உரங்களும் தேவையில்லை. இரண்டு அல்லது மூன்றடி ஆழத்தில் குழியெடுத்து நடவு செய்து, தண்ணீர் ஊற்றி வளர்ந்து வந்தால் போதும். அதுவாகவே வளர்ந்துவிடும். சந்தன மரங்களை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகுகிறதோ இல்லையோ... ஆரோக்கியம் என்னும் செல்வம் நிச்சயம் பெருகும். சந்தன மரங்களுக்கே உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த மரங்கள் நன்றாக வளரும் பட்சத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்கலாம் என்பதே” என்றார்.