ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

பேராயுதம்!

ஆசிரியர்
News
ஆசிரியர்

தலையங்கம்


பேராயுதம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகிறோம்!’ என்று சொல்வதுபோல உள்ளது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் செயல்.

கடந்த அக்டோபர் 18-ம் தேதி, சத்தமில்லாமல், மரபணு மாற்றுக் கடுகு பயிரை வணிக உற்பத்திக்காகக் களப் பரிசோதனை செய்ய அனுமதி அளித்திருக்கிறது.

“இப்போது, பயிரிடப்பட்டு வரும் பாரம்பர்ய ரகக் கடுகுகளும், உயர் விளைச்சல் ரகங்களும் நன்றாகவே விளைச்சல் கொடுக்கின்றன. அப்புறம் எதற்கு இந்த மரபணுக் கடுகு?” என்று சூழல் ஆர்வலர்களும் இயற்கை விவசாயிகளும் எழுப்பும் கேள்விக்கு உரிய பதில் இல்லை.

“விதைகளை, விவாசாயிகளே பரிமாறிக்கொண்ட காலம்... வேளாண்மையின் பொற்காலம். விதைப்பரவல் என்கிற ஒரே நோக்கத்தைத் தவிர அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், என்றைக்கு பன்னாட்டு நிறுவனங்கள் விதை உற்பத்தி செய்து லாபத்தில் கொழிக்க ஆரம்பித்தனவோ, அன்றைக்கே ஆரம்பித்துவிட்டது யுத்தம். இனி விதைகளே பேராயுதம்’’ என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

அந்தப் பேராயுதம், பேராசைக்காரர்களின் ஆயுதமாக மாறிவிடக்கூடாது. அதற்கு மத்திய அரசு ஒருபோதும் துணைபோய்விடக் கூடாது!

- ஆசிரியர்

Cartoon
Cartoon