Published:Updated:

கொச்சியில் தென்னை விவசாயிகள் பங்கேற்கும் `தென்னை தின விழா!'

தென்னை

கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தென்னை வளர்க்கும் மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வேளாண் பெருமக்களும் விவசாய பல்கலைக்கழக மாணவ மாணவிகளும், உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொச்சியில் தென்னை விவசாயிகள் பங்கேற்கும் `தென்னை தின விழா!'

கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தென்னை வளர்க்கும் மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வேளாண் பெருமக்களும் விவசாய பல்கலைக்கழக மாணவ மாணவிகளும், உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Published:Updated:
தென்னை

தென்னை மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நம் நாட்டில் ஆண்டுதோறும் தென்னை தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுக்கான தென்னை தினக் கொண்டாட்டங்களை, இந்திய அரசும், சர்வதேச தென்னை சமூகமும் இணைந்து நடத்துகிறது. செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் நடத்தும் சிறந்த வேளாண் நடைமுறைகள் நிகழ்வுடன் இணையாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

கொச்சியில் தென்னை விவசாயிகள் பங்கேற்கும் `தென்னை தின விழா!'

வேளாண் துறைக்கான மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த ஆண்டின் உலக தென்னை தினக் கொண்டாட்டங்களை குஜராத்தில் உள்ள ஜூனாகாட்டில் மெய்நிகர் முறையில் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் குஜராத்தில் மாநில தென்னை வாரிய மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நாளைய நன்மைக்காகவும், வாழ்க்கைக்காகவும் தென்னை வளர்ப்பு” அவசியமென்பதை இந்த உலக தென்னை தினக் கொண்ட்டாட்டத்தில் வலியுறுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வில் தென்னை வாரியத்தின் தேசிய விருது பெற்றவர்களை அறிவிப்பதோடு, தென்னை சார்ந்த பொருள்களில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கியோருக்கும் விருதுகளையும் அறிவிக்கின்றனர்.

தென்னை
தென்னை

தென்னை வாரியத்தின் தேசிய விருதுகளும், சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதுகளும், இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. ஜூனாகட்டில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகளும், அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தென்னைச் சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வேளாண் பெருமக்களும் விவசாய பல்கலைக்கழக மாணவ மாணவிகளும், உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். தென்னை வளர்ப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள ஏழு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த சர்வதேச பயிலரங்கில் பங்கு பெற்று உரையாற்ற உள்ளனர். கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், வேளாண் துறைக்கான இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி கலந்துகொள்ள உள்ளார்.