Published:Updated:

`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..!’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

குருத்துப்புழு தாக்குதல்
குருத்துப்புழு தாக்குதல்

ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில், தற்போது, பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கக்கூடிய மல்பெரி செடியில், குருத்துப் புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது.

விவசாயத்தைப் பிரதானமாக கொண்டுள்ள தேனி மாவட்டத்தில், மா, நெல், கரும்பு, வாழை ஆகிவற்றுக்கு அடுத்தபடியாக, பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் பலர் ஆர்வம் கொண்டுள்ளனர். மாதம்தோறும் நிரந்தர வருமானம் கிடைப்பதால், பட்டு உற்பத்தியில் விவசாயிகள் பலரும் ஈடுபட்டிருக்கின்றனர்.

குருத்துப்புழு தாக்குதல்
குருத்துப்புழு தாக்குதல்

கடந்த ஆண்டு முடிவில், பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் எனக்கூடிய ஒருவகை ஈக்கள் தாக்கின. இதனால், பட்டுப்புழுக்கள் இறப்பு அதிகமாகி, பட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பட்டுவளர்ச்சித்துறை சார்பில், `தைமஸ்’ எனப்படும் ஒட்டுண்ணி ஈக்களை வழங்கியது.

குருத்துப்புழு
குருத்துப்புழு

இதனால், ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்தது. இந்த நிலையில், தற்போது, பட்டுப்புழுக்களுக்கு உணவாக கொடுக்கக்கூடிய மல்பெரி செடியில், குருத்துப் புழுக்கள் தாக்குதல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் சிலரை சந்தித்துப் பேசினோம்.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

``என்னுடைய பெயர் நாகராஜ். சொந்த ஊர் கொடுவிலார்பட்டி, சுமார் 30 வருடங்களாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். கடந்த ஆண்டு ஊசி ஈக்கள் தாக்கம் அதிகமாக இருந்தது. என்னுடைய அனுபவத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஊசி ஈக்கள் வந்தன. விவசாயிகள் பலரும் இதனால் நஷ்டம் அடைந்தனர். இருந்தாலும், பட்டுவளர்ச்சித்துறையின் உதவியோடு ஊசி ஈக்களைக் கட்டுப்படுத்தினோம். தற்போது, மல்பெரி செடியில், குருத்துப்புழுக்கள் தாக்கம் இருக்கிறது. பொதுவாக, அக்டோபர், நவம்பர் மாத குளிரில் இந்தக் குருத்துப்புழுக்கள் தாக்கம் இருக்கும். ஆனால், தற்போது வெயில் அதிகமாக அடிக்கக்கூடிய நேரத்தில், குருத்துப்புழுக்கள் தாக்குதல் இருக்கிறது. காலம் மாறி குருத்துப்புழுக்கள் தாக்குதல் இருப்பதால், எங்களுக்குப் பயமாக இருக்கிறது. பட்டுவளர்ச்சித்துறை சார்பில், மருந்து கொடுத்தார்கள். அதை செடிகளுக்கு அடித்தோம். ஆனாலும், குருத்துப்புழுக்கள் தாக்கம் குறையவில்லை. அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது” என்றார்.

நாகராஜ்
நாகராஜ்
`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

தாடிச்சேரியைச் சேர்ந்த விவசாயி விஜயராகவன் நம்மிடையே பேசும்போது, ``பள்ளபட்டி, அம்மச்சியாபுரம், கோட்டூர், உப்பார்பட்டி, நாகலாபுரம், பெருமாள்கவுண்பட்டி என தேனியில் பல்வேறு பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குருத்துப்புழுக்கள் தாக்கம் அதிகமாக இருப்பதால், கடந்த ஒரு மாத காலம், பெரும்பாலான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பை நிறுத்திவைத்துள்ளனர். இந்தப் புழுக்கள் முதலில், செடியின் குருத்தைச் சாப்பிடும். இதனால், இளம்புழுக்களுக்கு மல்பெரி குருத்தை உணவாக கொடுக்கமுடியாத நிலை ஏற்படும். புழுக்கள் வாங்கி அதை சாகடிப்பதவிட, புழுக்கள் வாங்காமல் இருப்பதே நல்லது என விவசாயிகள் முடிவெடுக்கிறார்கள். நான் 1 ஏக்கரில் மல்பெரி செடி பயிர் செய்திருக்கிறேன். மொத்தமாக குருத்துப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

குருத்துப்புழு தாக்குதலுக்கு உள்ளான மல்பெரி செடிகள்
குருத்துப்புழு தாக்குதலுக்கு உள்ளான மல்பெரி செடிகள்

இது தொடர்பாக பட்டுவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``குருத்துப்புழுக்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளது. விரைவில், குருத்துப்புழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு