Published:Updated:

`பப்ஜி’ மதன்: சிறையில் சொகுசு வசதி... மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி?! - அதிர்ச்சி ஆடியோ

யூடியூபர் `பப்ஜி’ மதன், கிருத்திகா
News
யூடியூபர் `பப்ஜி’ மதன், கிருத்திகா

`பப்ஜி’ மதனுக்கு சிறையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, அவரின் மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடி, அதன் மூலம் ஆபாசப் பேச்சு, பண மோசடி ஆகிய வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர் `பப்ஜி’ மதன். மதன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

`பப்ஜி’  மதன் கைது
`பப்ஜி’ மதன் கைது

இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர சிறை அதிகாரிகள் அவருடைய மனைவியிடம் ரூ.3 லட்சம் கேட்பதாக ஓர் ஆடியோ வெளியாகியிருக்கிறது. ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர முதற்கட்டமாக கூகுள் பே மூலமாக ரூ.25 ஆயிரம் அனுப்பியதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இதையொட்டி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்கும் ஆடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.