நடப்பு
Published:Updated:

அமேசான் தடை... தொடர் சிக்கலில் ஃப்யூச்சர் குழுமம்! - என்ன நடக்கும்..?

ஃப்யூச்சர் குழுமம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்யூச்சர் குழுமம்

இந்தத் தீர்ப்பால் அமேசான், ரிலையன்ஸுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மொத்த பாதிப்பும் ஃப்யூச்சருக்கே!

சிக்கலுக்கு சிக்கல் என நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஃப்யூச்சர் ரீடெயில். பொதுமுடக்கக் காலத்தில் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கு வருமான இழப்பைச் சந்தித்தது. இதனால் இதன் கடன் சுமை அதிகரித்தது. ஃப்யூச்சர் நிறுவனத்தை ரிலையன்ஸுக்கு விற்க கடந்த ஆகஸ்ட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த டீலின் மதிப்பு ரூ.24,713 கோடி.

ஃப்யூச்சரின் இந்த முடிவை எதிர்த்து அமேசான் வழக்கு தொடுத்தது. ‘ஃப்யூச்சர் கூப்பன் என்னும் நிறுவனத்தில் 49% பங்குகளை கடந்த வருடம் வாங்கினோம். ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் ஃப்யூச்சர் கூப்பன் நிறுவனத்துக்கு 7.3% பங்குகள் உள்ளது. அதாவது, ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் மறைமுகமாக 5% பங்குகள் அமேசான் வசம் இருப்பதால், அந்த நிறுவனத்தை எங்கள் அனுமதி இல்லாமல் விற்கக் கூடாது’’ என சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் வாதிட, அதற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்திருக்கிறது.

அமேசான் தடை... தொடர் சிக்கலில் ஃப்யூச்சர் குழுமம்! - என்ன நடக்கும்..?

‘ஃப்யூச்சர் குழுமத்தின் சொத்துகளை விற்றுதான் கடனைச் செலுத்த வேண்டும். இது நடக்காவிட்டால் 29,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும்’ என ஃப்யூச்சர் குழுமம் வாதாடியது. ஆனால், தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தத் தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான். இதனால் அமேசான், ரிலையன்ஸுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், மொத்த பாதிப்பும் ஃப்யூச்சர் குழுமத்துக்குத்தான்!

- வா.கா