Published:Updated:

7 நாள்களில் வீட்டை காலி செய்யுங்கள்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

சந்திரபாபு நாயுடு
News
சந்திரபாபு நாயுடு

‘சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளதால் அதை இடிக்கவேண்டும்’ எனவே வீட்டை காலி செய்யுங்கள் என சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Published:Updated:

7 நாள்களில் வீட்டை காலி செய்யுங்கள்’ - சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

‘சட்டவிரோதமாக வீடு கட்டியுள்ளதால் அதை இடிக்கவேண்டும்’ எனவே வீட்டை காலி செய்யுங்கள் என சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சந்திரபாபு நாயுடு
News
சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த பிறகு வந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். அவரின் ஆட்சி காலத்தில் ஆந்திராவின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்படும் என கூறி அதற்காக அமராவதியை மேம்படுத்தும் வேலைகளில் ஈடுப்பட்டு வந்தார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அதனால் 2016-ம் ஆண்டு அமராவதியில் உள்ள உண்டவள்ளி என்ற பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு வீட்டைக் கட்டி அங்கு தன் குடும்பத்தினருடன் குடியேறினார் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மேலும் அவரது வீட்டுக்கு அருகில் பிரஜா வேதிகா என்ற ஒரு கட்டடம் கட்டி அதை கட்சி கூட்டம், மக்களை சந்திப்பது போன்றவற்றுக்கு பயன்படுத்தி வந்தார்.

சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதிக்கரையில் வீடு கட்டும் போதே, ஆபத்தான ஆற்று படுக்கையில் வீடு கட்டுவதாக அப்போதைய எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

பிரஜா வேதிகா
பிரஜா வேதிகா

இதற்கிடையில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள கட்டடங்கள் சட்டவிரோதமாக, ஆபத்தான முறையில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிக்க உத்தரவிட்டுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த பிரஜா வேதிகா கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது சந்திரபாபு நாயுடுவின் வீட்டை இடிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆந்திர தலைநகர் மேம்பாட்டு ஆணையம். அதில், ‘ குண்டூர் மாவட்டம், உண்டவள்ளியில் உள்ள உங்கள் 6 செண்ட் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள், நீச்சல் குளம் ஆகியவற்றை கட்டுவதற்கு எந்த முறையான அனுமதியும் பெறவில்லை. கிருஷ்ணா நதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது . இன்னும் ஏழு நாள்களுக்கு வீட்டை காலி செய்ய வேண்டும்” என குறிபிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
நோட்டீஸ்
Twitter - @pavanmirror

முன்னதாக, பிரஜா வேதிகா கட்டடத்தை இடிக்கவேண்டாம் என்றும் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அதை தானே பயன்படுத்த அனுமதி வேண்டும் என்றும் ஆந்திர அரசிடம் அனுமதி கோரியிருந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால் அவருக்கு அனுமதி வழங்க மறுத்த அரசு, அந்த கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது. அப்போதே அடுத்தது தன் வீடும் இடிக்கபடும் என தெரிந்து வேறு வீடு தேட தொடங்கிவிட்டாராம் சந்திரபாபு நாயுடு. அவர் எதிர்பார்ததை போலவே தற்போது தன் வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

இது பற்றி பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி விஜய், “ சந்திரபாபு நாயுடு, விரைவில் தன் வீட்டை காலி செய்யவுள்ளார். தற்போது தான் வசிக்கும் வீட்டுக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் புதிய வீடு தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வீடுகள் வீடியோ மூலம் நாயுடுவுக்கு காட்டப்பட்டு வருகிறது. நாயுடு தற்போது உள்ள வீட்டின் ஆவணங்களை நாங்கள் சரிபார்த்தோம். அங்கு வீடு கட்டுவதற்கு 2012-ம் ஆண்டு பஞ்சாயத்து அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த வீடு நதிகள் பாதுகாப்புக்கு உட்பட்டுதான் கட்டப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.