தசரா பண்டிகை இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் தனது வருங்கால மருமகனுக்காக 125 வகையான உணவு வகைகளுடன் ஸ்பெஷல் விருந்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவைச் சேர்ந்த கபுகந்தி சைதன்யா மற்றும் நிகாரிகா இருவருக்கும் அடுத்த ஆண்டு மார்ச் 9ம் தேதி திருமணம் செய்வதாக அண்மையில் நிச்சயம் செய்யப்பட்டது. சைதன்யா-நிஹாரிகாவின் நிச்சயத்திற்குப் பிறகு முதல் பண்டிகையாக தசரா வந்ததிருக்கிறது.

இந்நிலையில் சைதன்யா-நிஹாரிகாவின் நிச்சயத்திற்குப் பிறகு வரும் முதல் தசாரா என்பதால் அதை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்திருக்கின்றனர் பெண் வீட்டார். பெண்ணின் அம்மா தன் மருமகனை வீட்டிற்கு அழைத்து பிரமாண்டமான முறையில் விருந்து வைத்துள்ளார். இதற்காக 95 வகையான உணவுகள் பிரத்யேகமாக ஆர்டர் செய்திருக்கிறார். மேலும், 30 வகையான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்திருக்கிறார். மொத்தம் 125 வகையான உணவு வகைகளுடன் ஸ்பெஷல் விருந்து நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.