Published:Updated:

செய்தியும் சிந்தனையும்

செய்தியும் சிந்தனையும்

பால், மின்சாரம் போன்ற அடிப்படைப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் என்பது ஒரு விஷவட்டம். ஒரு பொருள் விலை ஏறும்போது அதனுடன் பல்வேறு பொருள்களும் மறைமுகமாக விலையேறுகின்றன. ஆனால் பெரும்பகுதி மக்களின் வருமானம் உயர்வதில்லை. இதன்விளைவு வாழ்க்கைத் தரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்படுகிறது. வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை எந்த அளவு நம்புவது? அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதை பரப்புவது ஒரு குற்றத்துக்கு நாமே உடந்தையாகிவிடுவதுபோல் ஆகிவிடாதா? பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறுகிறார். சட்டமாக்குவது பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும். அதே சமயம் மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தொழிலை நியாயப்படுத்துவது போல் ஆகாதா? கலாசார காவலர்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். தனி மனித உரிமைகளுக்காகப் போராடும் குழுக்களோ பொது இடத்தில் முத்தமிட்டு அன்பைத் தெரிவிக்கும் போராட்டத்தின் மூலம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். பண்பாடும், தனிமனித உரிமையும் சந்திக்கும் புள்ளி எது?

 நவம்பர் 11 வரை

செய்தியும் சிந்தனையும்
அடுத்த கட்டுரைக்கு