Published:Updated:

அரசியலில் இருந்து ஓய்வு: தலாய்லாமா அறிவிப்பு

தர்மசாலா, மார்ச் 10,2011

அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இன்று அறிவித்தார். ##~~##

தர்மசாலாவில் இதனை அறிவித்த தலாய் லாமா, சீனாவிடம் இருந்து திபெத் விடுதலை பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் கையில் நாடு சொல்ல வேண்டும் தாம் விரும்புவதாகவும், அந்த நாள் நெருங்கிவிட்டதாகவும் கூறினார்.

அரசியலில் இருந்து தாம் விலகினாலும், மதத் தலைவராக தமது கடமையைத் தொடரவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 1959-ல் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்டு, சுதந்திர நாடாக்குவதற்கு நீண்ட காலமாக போராடி வந்த அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காத பட்சத்தில், இந்த விவகாரம் உலக அரங்கில் கவனத்தைப் பெற்று, சீனாவின் அடக்குமுறையை வெகுவாக கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு