Published:Updated:

மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?
மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?

மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?

பிரீமியம் ஸ்டோரி

ஹலோ வாசகர்களே..!

மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?



மாநில அரசாங்கங்களும் பெட்ரோல் விலையைக் குறைக்குமா?

பெ
ட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.50-ஐ குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது மத்திய அரசாங்கம். மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் பா.ஜ.க ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் தங்கள் பங்காக ‘வாட்’ வரியில் ரூ.2.50-ஐ குறைத்துள்ளது. இந்த மாநிலங்கள் செய்ததுபோல, தமிழக அரசாங்கமும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதே நடுநிலையாளர்கள் எழுப்ப விரும்பும் முக்கியமான கேள்வி.

மத்திய அரசு கலால் வரியில் லிட்டருக்கு ரூ.1.50 குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பாக லிட்டருக்கு ரூ.1  குறைத்துள்ளன. மாநில அரசு விதிக்கும் வரியானது அடிப்படை விலை, கலால் வரி மற்றும் டீலர் கமிஷன் ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் சதவிகித அடிப்படையில் விதிக்கப்படுவதாகும். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது,  மாநில அரசாங்கங்களுக்கு  ‘வாட்’ வரிமூலம் கிடைக்கும் வருமானம் உயரும். இந்த அதிக வருமானமானது மாநிலங்கள் எதிர்பார்க்காமல் கிடைக்கும் வருமானமாகும்.  
 
பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள மத்திய அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களும் முடிவெடுத்ததுபோல,   மாநில அரசாங்கங்கள் ஏன் முன்வரக்கூடாது?

இந்த விஷயத்தில் தமிழக அரசாங்கம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம். காரணம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.16 சதவிகிதமும், ஒரு லிட்டர் டீசலுக்கு 24.08 சதவிகிதமும் ‘வாட்’ வரியை வசூல் செய்கிறது தமிழக அரசாங்கம். ஆனால், மேற்கு வங்க மாநிலம் 25.25 சதவிகிதமும், ஹரியானா 19.75 சதவிகிதமும் மட்டுமே ‘வாட்’ வரி வசூலிக்கிறது. இந்த மாநிலங்கள் அளவுக்கு ‘வாட்’ வரியைக் குறைக்கத் தேவையில்லை என்றாலும், தனது பங்குக்கு ஒரு லிட்டருக்கு 2 - 3 ரூபாய் குறைக்கலாமே! இந்த சமயத்தில், மாநில அரசாங்கங்கள் தங்களுக்கு வரும் வருமானம் எதையும் இழக்காமல், தங்கள் பங்குக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வரை குறைக்கலாம் என எஸ்.பி.ஐ ஆய்வு நிறுவனம் சொல்லியிருப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. 

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பினை பா.ஜ.க ஆட்சி செலுத்தும் மாநிலங்கள், ஆட்சி செலுத்தாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்க்காமல்,  மத்திய அரசு செய்ததுபோல, மாநில அரசாங்கங்களும் தங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் வருவாயைக் குறைத்துக்கொண்டால், பணவீக்கம் குறைந்து மக்கள் தங்கள் பட்ஜெட்டில் துண்டுவிழாமல் சமாளிக்க முடியும்.  மக்களின் நலனே முக்கியம் என்பதை  காதுகிழிய கூச்சலிடும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்க இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும்?

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு