Published:Updated:

BSNL-ஐ மேம்படுத்த 1,64,000 கோடி ரூபாய் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்!

4ஜி சேவைகளை வழங்க தேவையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு பி.எஸ்.என்.எல்-க்கு வழங்கும். பி.எஸ்.என்.எல் உடன் பாரத் நெட் மற்றும் பி.பி.என்.எல் போன்ற நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன.

BSNL-ஐ மேம்படுத்த 1,64,000 கோடி ரூபாய் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்!

4ஜி சேவைகளை வழங்க தேவையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு பி.எஸ்.என்.எல்-க்கு வழங்கும். பி.எஸ்.என்.எல் உடன் பாரத் நெட் மற்றும் பி.பி.என்.எல் போன்ற நிறுவனங்கள் இணைக்கப்பட உள்ளன.

Published:Updated:

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்சத்தை எட்டி வரும் நிலையில், அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நலிவை சந்தித்து இருக்கிறது என்றே கூற வேண்டும்.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனவே, அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த 1,64,000 கோடி (1.64 லட்சம் கோடி) ரூபாய் நிதியளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சரவை குழு கூறியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், ``பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த நிதியளிக்க உள்ள 1.64 லட்சம் கோடி ரூபாயானது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பயன்படுத்தபட உள்ளது. 4ஜி சேவைகளை வழங்க தேவையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் மத்திய அரசு பி.எஸ்.என்.எல்-க்கு வழங்கும். இதற்காக நிதி தொகையில் இருந்து 22,471 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கிராமப்புற மக்களுக்கும் 4ஜி வசதியைப் பெற 26,316 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். பி.எஸ்.என்.எல் உடன் பாரத் நெட் மற்றும் பி.பி.என்.எல் போன்ற நிறுவனங்கள் இணைக்கப்படும் எனக் கூறினார்.