Published:Updated:

பிகாரில் 2016 ஏப்ரல் 1 முதல் மது விற்பனைக்கு தடை: நிதிஷ்குமார் அதிரடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிகாரில் 2016 ஏப்ரல் 1 முதல் மது விற்பனைக்கு தடை: நிதிஷ்குமார் அதிரடி!
பிகாரில் 2016 ஏப்ரல் 1 முதல் மது விற்பனைக்கு தடை: நிதிஷ்குமார் அதிரடி!

பிகாரில் 2016 ஏப்ரல் 1 முதல் மது விற்பனைக்கு தடை: நிதிஷ்குமார் அதிரடி!

பாட்னா: பிகாரில் வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
 

பிகாரில் 2016 ஏப்ரல் 1 முதல் மது விற்பனைக்கு தடை: நிதிஷ்குமார் அதிரடி!

நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி, மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது நிதிஷ்குமார், "நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன்" என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி வாக்குறுதியை நிதிஷ்குமார் இன்று நிறைவேற்றியுள்ளார்.

பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

மேலும் பிகாரில் மதுவுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய பெண்களுக்கு நிதிஷ்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு