Published:Updated:

``குழந்தை இறந்து பிறந்தால்... 60 நாள்கள் மகப்பேறு சிறப்பு விடுப்பு"- மத்திய அரசு!

newborn ( pixabay )

குழந்தை இறந்து பிறந்தால், அது எந்தளவிற்கு ஒரு தாயின் வாழக்கையில், நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மைக் கனவுகளைச் சுமந்திருக்கும் பெண்களின் மகப்பேறு அனுபவங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக முடிவதில்லை. சிலருக்கு குழந்தை இறந்து பிறக்கலாம் அல்லது பிறந்து சில நாள்கள் கழித்து இறந்து போகலாம். அப்போது தங்கள் உடலளவிலும், மனதளவிலும் அவர்கள் அனுபவிக்கும் நரக வேதனைகள் ஏராளம். அந்த இழப்பிலிருந்து முழுமையாக மீள்வது அவ்வளவு சுலபமில்லை. போதிய அளவு ஓய்வும், ஆறுதலும் தேவை.

``குழந்தை இறந்து பிறந்தால்... 60 நாள்கள் மகப்பேறு சிறப்பு விடுப்பு"- மத்திய அரசு!
pixabay

எனவே `மத்திய அரசு ஊழியர்களாகப் பணிபுரியும் பெண்களுக்கு, பிரசவத்தின்போது குழந்தை இறந்தாலோ அல்லது பிறந்த சில நாள்களுக்குப் பிறகு இறந்தாலோ அவர்களுக்கு 60 நாள்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்’ என மத்திய பணியாளர் நலன் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. அதாவது குழந்தை இறந்து பிறந்தாலோ அல்லது பிறந்து 28 நாள்களுக்குள் இறந்தாலோ இந்தச் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தை பிறந்த உடன் இறந்தால் அளிக்கப்படும் மகப்பேறு விடுப்பு அளிக்க, மத்திய பணியாளர் நலன் பயிற்சித் துறையிடம், பல கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தைச் சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, குழந்தை பிறந்த உடன் இறந்தால் அல்லது சில நாள்களுக்குப் பிறகு இறந்தால், அது எந்தளவிற்கு ஒரு தாயின் வாழக்கையில், நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

``குழந்தை இறந்து பிறந்தால்... 60 நாள்கள் மகப்பேறு சிறப்பு விடுப்பு"- மத்திய அரசு!
pixabay

``ஒருவேளை, அப்படி அளிக்கப்படும் மகப்பேறு விடுப்புக்குப் பிறகும், அவர் தன்னுடைய விடுப்பைத் தொடர்ந்தால், மருத்துவ சான்றிதழை அளிக்குமாறு வற்புறுத்தாமல், அப்பெண்ணின் வேறொரு விடுப்பிலிருந்து மாற்றிக் கொள்ளலாம். இந்த விடுப்பானது இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளவர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மத்திய அரசுப் பெண் ஊழியர்களுக்கும் மட்டுமே பொருந்தும்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் எனப்படுகின்றன. ஒருவேளை அவசரகால பிரசவமானது, தனியார் மருத்துவமனையில் நடந்தால், சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயம்’’ என மத்திய பணியாளர் நலன் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.