Published:Updated:

`விமானங்களில் பயணிப்பவர்களின் கவனத்துக்கு': அரசின் புதிய நடவடிக்கை... நல்லதா கெட்டதா!

விமான நிலையம்

இந்தச் செயல்முறையை அறிமுகப்படுத்தியன் மூலமாக சர்வதேச `பயணிகளின் பெயர்ப் பதிவு’ (passenger Name Record) செய்யும் 60 நாடுகளில் இந்தியாவும் ஒன்றானது.

`விமானங்களில் பயணிப்பவர்களின் கவனத்துக்கு': அரசின் புதிய நடவடிக்கை... நல்லதா கெட்டதா!

இந்தச் செயல்முறையை அறிமுகப்படுத்தியன் மூலமாக சர்வதேச `பயணிகளின் பெயர்ப் பதிவு’ (passenger Name Record) செய்யும் 60 நாடுகளில் இந்தியாவும் ஒன்றானது.

Published:Updated:
விமான நிலையம்

பாராளுமன்றத்தில் தரப்பட்ட விவரங்களின்படி இதுவரை நிதி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை 38. கடந்த சில வருடங்களில் நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோர் நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

விமான நிலையம்
விமான நிலையம்

இந்நிலையில், நிதிமோசடி செய்துவிட்டு வெளிநாடுகளில் தப்பிச் செல்வதைத் தடுக்க விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் விவரங்களை 24 மணிநேரத்துக்கு முன்பே கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் ஆகஸ்ட் 8-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி விமான நிலையங்கள் பயணிகளின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள், பேமென்ட் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்தச் செயல்முறையை அறிமுகப்படுத்தியன் மூலமாக சர்வதேச `பயணிகளின் பெயர்ப் பதிவு’ (passenger Name Record) செய்யும் 60 நாடுகளில் இந்தியாவும் ஒன்றானது.

Flight travel
Flight travel

விமான நிறுவனங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:

*பயணியின் பெயர், பில்லிங் அல்லது பேமென்ட் விவரம் ( கிரெடிட் கார்டு நம்பர்), டிக்கெட் விநியோகிக்கப்பட்ட நாள், பி.என்.ஆர் எண், மொபைல் நம்பர், இ - மெயில் ஐ.டி, டிராவல் ஏஜென்சியின் விவரங்கள் உள்ளிட்ட 19 தகவல்களை அரசுக்கு கட்டாயமாக அளிக்க வேண்டும்.

*இந்த விவரங்களைத் தரத் தவறிய நிறுவனங்களுக்கு ரூ. 25,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.