Published:Updated:

15 கோடிக்கும் அதிகமான பான் கார்டு எண்கள்.. ஆதாருடன் இணைக்கப்படவில்லை!

ஆதார் அட்டை, பான் கார்டு

அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்துவிடும் என வருமான வரித்துரை தெரிவித்துள்ளது.

15 கோடிக்கும் அதிகமான பான் கார்டு எண்கள்.. ஆதாருடன் இணைக்கப்படவில்லை!

அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்துவிடும் என வருமான வரித்துரை தெரிவித்துள்ளது.

Published:Updated:
ஆதார் அட்டை, பான் கார்டு

ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கடைசி தேதியாக 2022, மார்ச் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி மக்கள் இணைக்கத் தவறும் பட்சத்தில் 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் 30, 2022 வரை பான் - ஆதார் அட்டையை இணைத்தால் 500 ரூபாய் அபராதமும், அதன் பிறகு இணைத்தால் 1,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்து இருந்தது.

வருமான வரி துறை
வருமான வரி துறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கான கால அவகாசத்தை 2023 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக, கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. புதிதாக அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதாலும், இந்த விஷயத்தில் கெடுபிடிகள் அதிகம் இல்லாததாலும் மக்கள் பான் - ஆதார் இணைப்பில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது. இதனடிப்படையில் பார்க்கும் போது 15 கோடிக்கும் அதிகமான பான் கார்டு எண் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என நிதி அமைச்சகத்தின் தரவுகள் சொல்கின்றன.

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு
ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு

இதுவரை பான் - ஆதார் லிங்க் செய்யாதவர்கள், கீழே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் ஆன்லைனில் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்கலாம்.

* www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்துக்கு செல்லவும்.

* Quick links எனத் தலைப்பு கீழ் உள்ள லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்யவும்.

* பின்பு பான், ஆதார் எண் மற்றும் பிற தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.

* ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டும் பாக்ஸில் டிக் செய்யவும். பின்னர் UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க செக் பாக்ஸை க்ளிக் செய்யவும்.

* திரையில் தெரியும் captcha code-ஐ பதிவிட வேண்டும்.

* லிங்க் ஆதார் டேப்பில் க்ளிக் செய்யவும்.