'பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இ - டிக்கெட்டும் அறிமுகப்படுத்தப்படும்' என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொலைவில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மாணவர்கள் இலவசமாக பள்ளி சென்று வர தமிழக அரசு பஸ் பாஸ் வழங்கி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுவரை பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணித்து வந்த நிலையில், விரைவில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு இறுதிக்குள் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் பயண சீட்டிற்கு பதிலாக, இ - டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் பேருந்துகளில் பயணிப்பவர்கள் GPay மூலமாக, அல்லது மொபைல் ஸ்கேனிங் மூலமாக பேருந்துகளில் இ-டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.