மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில், ஜவுளித் துறையில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜவுளி துறையில் முதலீடு செய்ய பல நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட 67 பரிந்துரை கடிதங்கள் வந்துள்ளன. அதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிளார்க் இந்தியா, அர்விந்த் லிமிட்டெட் போன்ற குறிப்பிட்ட 61 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசு அங்கீகரித்த இந்த நிறுவனங்களிலிருந்து முதலீடு தொகை 19 ஆயிரத்து 77 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 84 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வர்த்தகமும், 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என மத்திய ஜவுளித்துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.