Published:Updated:

`வாட்ஸ்அப்'பைக் கவனமாகக் கையாளுங்கள்... 50 லட்சம் கணக்குகளை முடக்க காரணம் இதுதான்!

வாட்ஸ்அப்

வெறுப்பு பேச்சு, போலி செய்தி பகிர்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது... பயனர்கள் புகார்கள், போலி கணக்கு போன்ற காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

`வாட்ஸ்அப்'பைக் கவனமாகக் கையாளுங்கள்... 50 லட்சம் கணக்குகளை முடக்க காரணம் இதுதான்!

வெறுப்பு பேச்சு, போலி செய்தி பகிர்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது... பயனர்கள் புகார்கள், போலி கணக்கு போன்ற காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

Published:Updated:
வாட்ஸ்அப்

மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த ஆண்டு கடுமையாக்கியது. அதன்படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட வேண்டும். அதில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

சமூக வலைதளங்களில் உலக முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் முக்கிய மெசேஜிங் ஆப்பாக வாட்ஸ்அப் விளங்குகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப் கடந்த ஆகஸ்ட் மாதம் 23.28 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவில் தடை செய்தது. செப்டம்பர் மாதத்தில் 15 சதவிகிதம் அதைவிட கூடுதலாக முடக்கியுள்ளனர்.

``செப்டம்பர் 1, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரை 26,85,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதில், 8,72,000 கணக்குள் முன்கூட்டியே முடக்கப்பட்டுள்ளன. எதாவது தீங்கு நடந்த பின் அதைக் கண்டறிவதற்குப் பதில், தீங்கு நடக்கும் முன்பாக அதைத் தடுப்பது சிறந்தது. எனவே, தடுப்பு நடவடிக்கையாக முன்கூட்டியே தடைசெய்துள்ளோம் என்கின்றனர். அதன்படி 8.72 லட்சம் கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பதை அறிந்து முன்கூட்டியே தடை செய்துள்ளனர்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், பயனர்கள் புகார்கள், போலி கணக்கு போன்ற காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள், 2021-ன் கீழ் இந்திய மாதாந்தர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  செப்டம்பர் மாதத்தில் 666 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 23 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ``வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களுக்கு சிறந்த சேவை வழங்க முயற்சி செய்து வருகிறது. பயனர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெறுப்பு பேச்சு, போலி செய்தி பகிர்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதி மீறல், பயனர்கள் புகார்கள், போலி கணக்கு, தவறான செய்தி பகிர்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இனிமேல் செய்திகளை பகிரும்போது கவனமாக இருப்போம்.