Published:Updated:

மஞ்சள் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?

சென்னை மழை ( வி.ஸ்ரீனிவாசலு )

நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மஞ்சள் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?

நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

Published:Updated:
சென்னை மழை ( வி.ஸ்ரீனிவாசலு )

``தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதால், நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

அதன்படி, நவம்பர் 21 காலை 8.30 மணி முதல் 22 காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் ராணிப்பேட்டை, கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்து நவம்பர் 22 காலை 8.30 மணி முதல் 23 காலை 8.மணி வரையிலான காலகட்டத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய தமிழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சில பாகங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அந்த வகையில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகக்கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை.

வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்பரப்பு காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். அதோடு கடலோர பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால், நவம்பர் 23 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.