Published:Updated:

காற்றின் வேகம், கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்... எச்சரிக்கும் வானிலை மையம்!

சென்னை மழை ( வி.ஸ்ரீனிவாசலு )

நவம்பர் 23-ம் தேதி, வட தமிழகம் - புதுச்சேரி, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம், கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும்... எச்சரிக்கும் வானிலை மையம்!

நவம்பர் 23-ம் தேதி, வட தமிழகம் - புதுச்சேரி, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Published:Updated:
சென்னை மழை ( வி.ஸ்ரீனிவாசலு )

2022 நவம்பர் 22-ம் தேதி ``தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திரா, வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது'' என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை
மழை

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ``மழைப் பொழிவைப் பொறுத்தவரையில், நவம்பர் 22-ம் தேதி தென்கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல வட தமிழகம் - புதுச்சேரியிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 23-ம் தேதி வட தமிழகம் - புதுச்சேரி, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமாவின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகத்தைப் பொறுத்தவரையில், 22-ம் தேதி மாலை வரை, தெற்கு ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்கரை வரை காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. சில நேரங்களில் காற்றின் வேகம் பரவலாக மணிக்கு 55 கி.மீ வரை வேகமாக வீச வாய்ப்புள்ளது. 

இந்த வேகம் இன்று மாலை வரை நீடித்து, அதன்பின் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 23-ம் தேதி, மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அதோடு மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் பரவலாக இருக்க வாய்ப்புள்ளது.

கடல்
கடல்

தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல், தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் வடக்கு இலங்கையின் கடல் பகுதிகளில், கடல் அலை இன்று மாலை வரை சீற்றத்தோடு காணப்படும். பின்னர் இச்சீற்றம் படிப்படியாகக் குறைந்து நவம்பர் 23-ம் தேதி காலை மிதமான நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது.

கடல் சீற்றத்தோடு காணப்படுவதால், நவம்பர் 22-ம் தேதி தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் வட இலங்கை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.