Published:Updated:

மக்களிடையே தங்க நகைகளின் தேவை குறைகிறதா... அறிக்கை சொல்வதென்ன?

தங்க நகை

2022-23 வது நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவை 8 சதவிகிதம் வரை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே தங்க நகைகளின் தேவை குறைகிறதா... அறிக்கை சொல்வதென்ன?

2022-23 வது நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவை 8 சதவிகிதம் வரை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
தங்க நகை

இறக்குமதி வரி உயர்வு, அதிக ஏற்ற இறக்க விலை மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை காரணமாக, நடப்பு 2022-23-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில், (2022 ஜூலை முதல் டிசம்பர் வரை) இந்தியாவில் தங்க நகைகளின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக, இந்திய முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (Investment Information and Credit Rating Agency of India Limited - ICRA) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 நகை
நகை

அந்த அறிக்கையில், ``2022-23 வது நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவையானது 8 சதவிகிதம் வரை குறையும். மேலும், மூன்றாம் காலாண்டில் தேவை 15 சதவிகிதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெருந்தொற்றின்போது முடங்கிப்போய் இருந்த பொருளாதாரம், 2021-22 ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மீண்டும் வளர்ச்சிக்கு திரும்பியது. எனவே, மக்கள் திருமணம் மற்றும் பண்டிகைக் காலங்களில் கணிசமான அளவுக்கு தங்க நகைகளை வாங்கினர். இதனால், விதிவிலக்காக இந்தக் காலாண்டில் மட்டும் தங்கத்தின் தேவை அதிகரித்தது.

தங்க நகை
தங்க நகை

அதேசமயம் சில்லறை நகை விற்பனைக் கடைகளின் வருவாயானது 2022-23-ம் நிதியாண்டில், தொடர்ச்சியான விரிவாக்க நடவடிக்கைகளால் 14 சதவிகிதமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.