Published:Updated:

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனத்துக்கு மீண்டும் சிக்கல்- மகாராஷ்டிரா அரசு அதிரடி நடவடிக்கை!

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர்!

புனே மற்றும் நாசிக்கில் இருந்து தரப்பரிசோதனைக்காக ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன. ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர், பச்சிளம் குழந்தைகளின் சருமத்தை பாதிக்கலாம் எனக் கருதப்பட்டது.

மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், வெள்ளிக் கிழமையன்று ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமத்தை `பொதுச் சுகாதார நலன் கருதி’ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன்
ஜான்சன் & ஜான்சன்

இது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ``கொல்கத்தாவை சேர்ந்த மத்திய மருந்து ஆய்வகத்தின் அறிக்கையின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புனே மற்றும் நாசிக்கில் இருந்து தரப் பரிசோதனைக்காக ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தச் சோதனையில் பேபி பவுடரின் Ph மதிப்பு தரமானதாக இல்லை. ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் பச்சிளம் குழந்தைகளின் சருமத்தை பாதிக்கலாம் என கருதப்பட்டது. எனவே ஜான்சன் & ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்திக்கான உரிமம் `பொதுச்சுகாதார நலன்’ கருதி ரத்து செய்யப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனத்துக்கு மீண்டும் சிக்கல்- மகாராஷ்டிரா அரசு அதிரடி நடவடிக்கை!
pixabay

மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு, மருந்து- அழகுசாதன சட்டம் 1940 விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு சந்தைகளில் விநியோகிக்கப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளைத் திரும்பப் பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்படுகிறது.