Published:Updated:

ஆரம்பமாகிறது கேரள அரசின் ஆன்லைன் ஆட்டோ - டாக்ஸி திட்டம்: ஊபர், ஓலாவுக்கு மாற்றாகுமா?

கேரள அரசு ஆன்லைன் ஆட்டோ டாக்ஸி சேவையை `கேரளா சவாரி’ என்ற பெயரில் ஆகஸ்ட் 17-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. சந்தையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான ஊபர் மற்றும் ஓலா போன்ற சேவைகளுக்கு மாற்றாக கேரள அரசின் `கேரளா சவாரி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் தற்போது ஓலா, ஊபர் போன்ற ஆப்களை பயன்படுத்தி தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்யும் பொறுப்பு அரசை சார்ந்தது என்ற முடிவுடன் கேரள அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

Travel
Travel
AP Photo/Rick Bowmer, File

கேரள அரசு மக்கள் பயணங்களுக்கான சேவையை வழங்கும் வகையில் ஆன்லைன் ஆட்டோ டாக்ஸி சேவையை `கேரளா சவாரி’ என்ற பெயரில் ஆகஸ்ட் 17-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.

மாநில தொழிலாளர்துறை மற்றும் இந்திய தொலைபேசி தொழில்கள் பாலக்காடு போன்றவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சந்தையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களான ஊபர் மற்றும் ஓலா போன்ற சேவைகளுக்கு மாற்றாக கேரள அரசின் `கேரளா சவாரி’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணம்... Money!
பணம்... Money!

மேலும் ஓட்டுநர்களுக்கு சரியான ஊதியமும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான விலையையும் உறுதி செய்தால் இந்தத் திட்டம் சிறந்த திட்டமாக விளங்கும், மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் மூலம் பல ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.