Published:Updated:

``சென்னையில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்''- புதிய கட்டுப்பாடுகள் வருமா?

சென்னை

தொற்று பாதித்த நபர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதா அல்லது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதா என்பதை மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பின்பே செய்ய வேண்டும்.

``சென்னையில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்''- புதிய கட்டுப்பாடுகள் வருமா?

தொற்று பாதித்த நபர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதா அல்லது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதா என்பதை மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பின்பே செய்ய வேண்டும்.

Published:Updated:
சென்னை

``வரும் ஆனா வராது என்பது போல’’ கோவிட் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. சிலநேரங்களில் தன்னுடைய கொடூர முகத்தைக் காட்டுகிறது. சில நேரங்களில் எங்கு இருக்கிறது எனத் தேடும் அளவிற்கு தொற்றுப்பரவல் ஏதும் இல்லாமல் இருக்கிறது. மக்களை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கிறது கொரோனா.

அதற்கேற்ப அரசும் கோவிட் தொற்று அதிகரிக்கும்போது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்தும், தொற்றுப்பரவல் குறையும்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் வருகிறது.

Covid
Covid
Family vector created by pikisuperstar - www.freepik.com

சென்னையில் கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாகத் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த அறிவிப்பின்படி...

*கோவிட் தொற்று பரவாமல் தடுக்க, மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.

*பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

*கோவிட் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*சளி, காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை செய்து கொள்ளாமல் மருத்துவர்களை அணுக வேண்டும். அதோடு கோவிட் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

``சென்னையில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்''-  புதிய கட்டுப்பாடுகள் வருமா?

*கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளபோது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள பிற நபர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

*தொற்று பாதித்த நபர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதா அல்லது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதா என்பதை மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பின்பே செய்ய வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி தங்களுடைய பங்களிப்பை மேற்கொண்டு வருகிறது. கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாள்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் போன்றவை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தொற்று பரவல் அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.