Published:Updated:

`அவசரகால கடன் உத்தரவாத திட்டம்' கால நீட்டிப்பு! எந்தெந்த நிறுவனங்கள் பயன்பெறும்?

அவசரகால நிதி

இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் முறையை எளிதாக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

`அவசரகால கடன் உத்தரவாத திட்டம்' கால நீட்டிப்பு! எந்தெந்த நிறுவனங்கள் பயன்பெறும்?

இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் முறையை எளிதாக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

Published:Updated:
அவசரகால நிதி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அவசரகால கடன் உத்தரவாத திட்டம், மகளிருக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்கள் மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்களின் விவரங்களை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

அதில், அவசரகால கடன் உத்தரவாத திட்டம் என்பது கோவிட்-19 நெருக்கடியின்போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வணிகத்தைத் தொடங்கவும், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான செலவை எதிர்கொள்ளவும், தகுதிபெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்கும் வகையில் `தற்சார்பு இந்தியா’ என்ற திட்டத்தின் ஒருபகுதியாகத் தொடங்கப்பட்டதே அவசரகால கடன் உத்தரவாத திட்டம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் முறையை எளிதாக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மே மாதம் 2020-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2023 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.

Money (Representational Image)
Money (Representational Image)

அதேபோல் தற்சார்பு இந்தியா நிதியம் என்பது வளர்ச்சியடை வதற்கான ஆற்றலையும் சாத்தியத்தையும் பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சமபங்கு நிதியைக் கொண்டு வர மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது.

அடுத்ததாக மகளிருக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் திட்டங்கள்: 2022 ஆகஸ்ட் 3-ம் தேதி நிலவரப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மொத்தம் 99,58,903. இவற்றில் மகளிரால் பதிவு செய்யப்பட்டதொழில் நிறுவனங்கள் 17,96,408.

2022 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.