தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் உற்பத்தி திறனை பெருக்க புதிய வலைதளம் ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Also Read

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வலைதளத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியை பெருக்குவதோடு, இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி இந்நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் பிரச்னைகளை தெரிவித்து அதற்கான தீர்வு பெறவும் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட இந்த வளர் 4.0 https://valar.tn.gov.in/ என்ற வலைத்தளம் ‘தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்குவது’ என்ற இலக்கை அடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வலைதளத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தங்களது பெயர், நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரம் உட்பட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.