Published:Updated:

`அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை!' - தெலங்கானா அரசு அதிரடி

தெலங்கானா சட்டமன்றம்

அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை நடத்தவோ, தனியார் நிறுவனத்தில் பணிபுரியவோ (Private Practice) தெலுங்கானாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

`அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்த தடை!' - தெலங்கானா அரசு அதிரடி

அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை நடத்தவோ, தனியார் நிறுவனத்தில் பணிபுரியவோ (Private Practice) தெலுங்கானாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
தெலங்கானா சட்டமன்றம்

அரசு மருத்துவர்கள் பெரும்பாலானோர் சுயமாக மருத்துவமனைகள் நடத்துகிறார்கள். இந்நிலையில் அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை நடத்த (Private Practice) தெலங்கானாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Hospital (Representational Image)
Hospital (Representational Image)
AP/ Jae C. Hong

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கான சட்ட திருத்தத்தைத் தெலங்கானா அரசு ஜூன் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கொண்டுவந்தது. அதில் தெலங்கானாவில் நேரடி பணி நியமனம் மூலம் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களும், இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படும் ஆசிரியப் பணி அல்லாத தரப்பிலிருந்து வரும் மருத்துவர்களும் தனியே மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சட்ட திருத்தம், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதார துறையில் பணிபுரியும் எம்.பி.பி.எஸ் தகுதியுடைய சிவில் அசிஸ்டன்ட் சர்ஜன் அனைவருக்கும் பொருந்தும். இந்த அறிவிப்புக்குப் பின் நேரடி பணிநியமனம் மூலமாகவும், பணி மாறுதல் மூலமாகவும் பணியில் சேர்க்கப்பட்ட அரசு மருத்துவர்கள் தனியாகப் பயிற்சி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

Hospital (Representational Image)
Hospital (Representational Image)
Photo: Vikatan

அரசு தரப்பிலிருந்து மருத்துவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாகவும், மாநிலத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சமூக சுகாதார மையங்களிலும் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism