Published:Updated:

நாப்கின், டேம்பூன்ஸ்... மாதவிடாய் சுகாதாரப் பொருள்களின் வரியைக் குறைத்த இலங்கை அரசு; காரணம் என்ன?

பள்ளி செல்லும் மாணவிகளும், பெண்களும் நாப்கின் டேம்பூன் போன்ற பொருள்களை வாங்க முடியாமல், மாதவிடாய் சமயங்களில் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

நாப்கின், டேம்பூன்ஸ்... மாதவிடாய் சுகாதாரப் பொருள்களின் வரியைக் குறைத்த இலங்கை அரசு; காரணம் என்ன?

பள்ளி செல்லும் மாணவிகளும், பெண்களும் நாப்கின் டேம்பூன் போன்ற பொருள்களை வாங்க முடியாமல், மாதவிடாய் சமயங்களில் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

Published:Updated:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக, மாதவிடாய் காலத்திற்கு தேவையான சுகாதார பொருள்களான நாப்கின் மற்றும் டேம்பூன்ஸ் போன்றவற்றை வாங்க முடியாமல் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகள் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், இலங்கை அரசு பெண்களுக்கான சுகாதாரப் பொருள்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது.

நாப்கின், டேம்பூன்ஸ்... மாதவிடாய்  சுகாதாரப் பொருள்களின் வரியைக் குறைத்த இலங்கை அரசு; காரணம் என்ன?

பெண்கள் எதிர்கொள்ளும் மாதாந்திர சிக்கல்களில் மாதவிடாயும் ஒன்று. மாதவிடாயின்போது உடலளவிலும் மனதளவிலும் பிரச்னைகளை எதிர்கொண்டாலும், மற்றொரு புறம் பொருளாதார ரீதியாகவும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதாவது பெண்கள் அச்சமயத்தில் தங்களின் வசதிக்கேற்ப சானிட்டரி நாப்கின்களையோ அல்லது டேம்பூன்களையோ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இலங்கையில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இச்சமயத்தில் பள்ளி செல்லும் மாணவிகளும், பெண்களும் இத்தகைய பொருள்களை வாங்க முடியாமல், மாதவிடாய் சமயங்களில் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில் பாலிசி அட்வகசி குழுவான `அட்வோகேடா' (Advocata) இந்தாண்டு நடத்திய ஆய்வில் சுமார் 5.3 மில்லியன் இலங்கை பெண்களால் சானிட்டரி பொருள்களை வாங்க முடியவில்லை எனத் தெரிவித்தது.

ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இந்தப் பிரச்னையை சரிசெய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ``மாதவிடாய் சுகாதார பொருள்களைத் தயாரிக்க, ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுக்கான சுங்க வரி, விமான நிலைய வரி மற்றும் இன்ன பிற உள்ளூர் வரிகள், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுகின்றன.

இறக்குமதி வரிக்குறைப்பு காரணமாக நாப்கின் மற்றும் டேம்பூன்களின் விலையும் 20 சதவிகிதம் வரை குறையும். பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மாதவிடாய் சமயத்தில் உபயோகப்படுத்தப்படும் சுகாதாரப் பொருள்களை மலிவு விலையில் கிடைக்க வழிவகை செய்வதற்காகவே இந்த வரிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளது.