Published:Updated:

கொரோனா: பெற்றோரை இழந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த விலக்கு!

கொரோனா மரணம்

கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, 18 வயது நிறைவடையும் பட்சத்தில் வட்டியோடு வழங்கப்படும்.

கொரோனா: பெற்றோரை இழந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த விலக்கு!

கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, 18 வயது நிறைவடையும் பட்சத்தில் வட்டியோடு வழங்கப்படும்.

Published:Updated:
கொரோனா மரணம்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினால், பல குடும்பங்களின் சமநிலை தவறியது. பலர் பொருளாதார ரீதியாகவும், பலர் உணர்வுகள்ரீதியாகவும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்புகளை எதிர்கொண்டனர். இந்த நெருக்கடி சமயத்தில் குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க அரசு நிவாரண உதவிகளை வழங்கியது.

அதன்படி கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, கடந்த ஆண்டு மே 29-ம் தேதி, பல நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டன.

education
education

அந்த அறிவிப்பில்,

*கொரோனா நோய்த்தொற்றில் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் 5 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, 18 வயது நிறைவடையும் பட்சத்தில் வட்டியோடு வழங்கப்படும்.

*பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

*பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் போன்ற கல்வி சார்ந்த செலவுகளை பட்டபடிப்பு வரை அரசே ஏற்கும்.

*அரசு காப்பகங்கள் அல்லது விடுதிகளில் தங்காமல் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் 3,000 ரூபாய் உதவித் தொகையானது இக்குழந்தைகள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.

கல்வி - சித்தரிப்பு படம்
கல்வி - சித்தரிப்பு படம்

மேலும் தனியார் பள்ளிகள் இந்தக் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு, கருத்துருவினை தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், அனைத்து பள்ளிகளில் இருந்தும் கருத்துரு அனுப்பியதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.