Published:Updated:

தமிழகத்தில் உயர்த்தப்படுகிறது சொத்து வரி... எங்கெங்கு, எவ்வளவு தெரியுமா?!

தமிழக அரசு

மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்திருகிறது.

தமிழகத்தில் உயர்த்தப்படுகிறது சொத்து வரி... எங்கெங்கு, எவ்வளவு தெரியுமா?!

மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்திருகிறது.

Published:Updated:
தமிழக அரசு

மாநிலத்தில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

அதன் அடைப்பிடையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவிகிதமும், 600 முதல் 1,200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு நூறு சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் உள்ள சொத்துகளுக்குச் சொத்து வரி 150 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.

சொத்து வரி
சொத்து வரி

சென்னையின் பிரதான நகரப்பகுதிகளில் வணிகப் பயன்பாட்டுக்கு 150 சதவிகிதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு நூறு சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

இதேபோல சென்னையோடு 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவிகிதமும், 600 முதல் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது. சென்னையோடு 2011-ம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் வணிகp பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு நூறு சதவிகிதமும், தொழில் மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு 25 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் சொத்து வரி குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சொத்து வரி உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புப் பகுதிகளை நான்கு வகையாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism