Published:Updated:

குரங்கு காய்ச்சல்; பரிசோதனை முதல் தனிமைப்படுத்துதல் வரை... தயார் நிலையில் தமிழ்நாடு!

குரங்கு அம்மை ( Twitter )

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ''தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை, எனவே மக்கள் பயப்பட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

குரங்கு காய்ச்சல்; பரிசோதனை முதல் தனிமைப்படுத்துதல் வரை... தயார் நிலையில் தமிழ்நாடு!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ''தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை, எனவே மக்கள் பயப்பட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

Published:Updated:
குரங்கு அம்மை ( Twitter )

'குரங்கு காய்ச்சல்' (Monkeypox) எனப்படும் வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்ற அறிகுறிகளோடு நீடிக்கும் இந்தத் தொற்று, பாதிக்கப்பட்டவர் இருமும்போது வெளிப்படும் எச்சில் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் மிகவும் அருகில் இருப்பவர்களுக்கு பரவும் அபாயம் உண்டு.

குரங்கு
குரங்கு
மாதிரி புகைப்படம்

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இந்நிலையில் பல நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் பட்சத்தில் தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``சமீபத்தில் குரங்கு காய்ச்சல் தொற்று பதிவான அல்லது சந்தேகிக்கப்படும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

ராதா கிருஷ்ணன்
ராதா கிருஷ்ணன்

சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறித்து ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்களின் ரத்தம், சளி, கொப்புளங்களில் உள்ள நீர் போன்றவை ஆய்வகப் பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், நோயாளியோடு கடந்த 21 நாள்கள் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது அனைத்து தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை, எனவே மக்கள் பயப்பட வேண்டாம்'' என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism