Published:Updated:

3 வருட காப்பீடு, தேவைப்பட்டால் கருக்கலைப்பு - வாடகைத்தாய் விதிகள் சொல்வதென்ன?

கர்ப்பிணி

காப்பீட்டுத் தொகையானது பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பின்பும் வாடகைத்தாய்க்கு உண்டாகும் அனைத்து சிக்கல்களையும் ஈடுகட்டும் வகையில் போதுமானதாக இருக்க வேண்டும்.

3 வருட காப்பீடு, தேவைப்பட்டால் கருக்கலைப்பு - வாடகைத்தாய் விதிகள் சொல்வதென்ன?

காப்பீட்டுத் தொகையானது பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பின்பும் வாடகைத்தாய்க்கு உண்டாகும் அனைத்து சிக்கல்களையும் ஈடுகட்டும் வகையில் போதுமானதாக இருக்க வேண்டும்.

Published:Updated:
கர்ப்பிணி

ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையே இல்லாத பட்சத்தில், புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பை அகற்றப்பட்டால், விவரிக்க முடியாத பல மருத்துவ காரணங்களால், கருத்தரிக்க இயலாது என்ற காரணத்தால், முந்தைய கர்ப்பங்களில் தொடர்ச்சியாக கருவை இழந்திருந்தால், ‘வாடகைத்தாய்’ மூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். வாடகைத்தாயாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. யாருக்காகவோ குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கும்போதும், பிரசவத்துக்குப் பின்பும் உடளவிலும் மனதளவிலும் அவர்கள் படும் அல்லல்கள் ஏராளம்.

கர்ப்பத்தில் குழந்தை
கர்ப்பத்தில் குழந்தை

இவர்களுக்கு உதவிடும் வகையில், சமீபத்தில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை விதிகளை Surrogacy (Regulation) Rules மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அந்த விதிகளில், பதிவு செய்யப்பட்ட வாடகைத்தாய் கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரியும் நபர்களுக்கான தேவைகள், தகுதிகள் மற்றும் வாடகைத்தாய் கிளினிக்கின் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து வெளியிடப்பட்டது. மேலும் வாடகைத்தாயின் ஒப்புதல் படிவமும் விதிகளில் கொடுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முக்கிய விதிகள்

* வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியினர் வாடகைத் தாய்க்கு 3 வருடங்களுக்கு (36 மாதங்களுக்கு) ‘பொது சுகாதார காப்பீடு’ பெற வேண்டும். காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் அல்லது ஏஜென்ட்களிடமிருந்து மட்டுமே இந்த காப்பீட்டைப் பெற வேண்டும்.

* இந்தக் காப்பீட்டுத் தொகையானது பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பின்பும் வாடகைத்தாய்க்கு உண்டாகும் அனைத்து சிக்கல்களையும் ஈடுகட்டும் வகையில் போதுமானதாக இருக்க வேண்டும்.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

* மருத்துவ சிகிச்சையின் போது வாடகைத்தாயின் வயிற்றில் ஒரு கரு மாற்றப்படும். கருவை மாற்றும் இந்த முயற்சி மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படும். அதற்கு மேல் செய்யக் கூடாது.

* 1971 ஆம் ஆண்டின் மருத்துவ கருவுறுதல் சட்டத்தின்படி, வாடகைத் தாயாக இருக்கும் ஒருவர் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு.

* வாடகைத்தாயாக இருக்கும்போது, அவருக்கு ஏற்படும் மருத்துவ செலவுகள், உடல்நலப் பிரச்னைகள், அவற்றால் உண்டாகும் இழப்புகள், அல்லது வாடகைத்தாயின் மரணம் மற்றும் இன்ன பிற செலவுகளுக்காக இழப்பீட்டைத் தரும் உத்தரவாதத்தை அந்த தம்பதியினரோ அல்லது பெண்ணோ நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரமாக அளிக்க வேண்டும்.