லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அடித்தல், உதைத்தல், விலகுதல்... இது ‘ஆன்டி வேலன்டைன்ஸ் டே’ கொண்டாட்டம்!

‘ஆன்டி வேலன்டைன்ஸ் டே’
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஆன்டி வேலன்டைன்ஸ் டே’

‘அடித்தல் தினம்’ (Slap Day). இந்த நாள்ல முன்னாள் காதலனை/காதலியைத் தேடிப்போய் அடிச் சிட்டு வரணும்னு அர்த்தம் கிடை யாதுங்க

பிப்ரவரி 7-ம் தேதி ரோஜா தினத்துல (Rose Day) சிவப்பு ரோஜா கொடுத்து லவ்வுக்கு சிக்னல் கொடுத்து, பிப்ரவரி 8-ம் தேதி ‘லவ் யூ’னு காதலைச் சொல்லி (Propose Day), ‘லவ் யூ டூ’ன்னு ரிப்ளை வந்தா, பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் (Chocolate Day) வாங்கிக் கொடுத்து, பிப்ரவரி 10-ம் தேதி கட்டிப்புடிச்சிட்டு தூங்க கரடி பொம்மை (Teddy Day) கொடுத்து, பிப்ரவரி 11-ம் தேதி ‘உனக்கு நான் எனக்கு நீ’ன்னு சத்தியம் செஞ்சு (Promise Day), 12-ம் தேதி ஹக் பண்ணி (Hug Day), 13-ம் தேதி முத்தம் பரிமாறி (Kiss Day), பிப்ரவரி 14-ம் தேதி ‘ஐயம் இன் ரிலேஷன்ஷிப்’னு ஸ்டேட்டஸ் வெச்சு, ஃபேஸ்புக்ல லவ்வரோட பேரை டேக் பண்ணி `ஹேப்பி வேலன்டைன்ஸ் டே'ன்னு உலகத்துக்கு அறிவிக்கிறது தான் வேலன்டைன்ஸ் டே வாரம்.

கடந்த சில வருடங்களா, காதலர் தினத்துக்கு அடுத்த நாளான பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரை `ஆன்டி வேலன்டைன்ஸ் டே' வாரம்னு ஒண்ணு கொண்டாடப்படுது. இதைக் கொண்டாடுறவங்க காதலுக்கோ, காதலர் தினத்துக்கோ எதிரானவங்க கிடையாது. முன்னாள் காதலன்/காதலியால பாதிக்கப்பட்டவங்க...

பிப்ரவரி 15

‘அடித்தல் தினம்’ (Slap Day). இந்த நாள்ல முன்னாள் காதலனை/காதலியைத் தேடிப்போய் அடிச் சிட்டு வரணும்னு அர்த்தம் கிடை யாதுங்க. அவங்க கொடுத்த வலியை அடிச்சு மனசைவிட்டு வெளியே துரத்த வேண்டிய நாளாம்.

பிப்ரவரி 16

‘உதைத்தல் தினம்’ (Kick Day). உங்களோட எக்ஸ் கொடுத்த கிஃப்ட் எல்லாத்தை யும் அழிக்க வேண்டிய நாள். அப்படி அழிக்கிறதுக்கு முன்னாடி, அதையெல்லாம் ஆசை தீர உதைச்சுக்கலாம்.

பிப்ரவரி 17

‘வாசனை தினம்’ (Perfume Day). பழைய காதலை அடிச்சாச்சு, உதைச் சாச்சு. அடுத்தென்ன..? மறுபடியும் ஒரு புத்தம்புது வாழ்க்கைக்கு நீங்க ரெடியாக வேண்டியதுதானே... இந்த நாள்ல உங்களை இன்னும் அழகாக் கிக்க வேண்டிய எல்லா பொருள்களை யும் வாங்கலாம்.

பிப்ரவரி 18

‘கடலை போடும் தினம்’ (Flirting Day). நாம நேசிக்கிறவங்களைவிட நம்மளை நேசிக்கிறவங்களை கல்யாணம் செஞ்சுகிட்டா வாழ்க்கை சிறப்பா இருக்கும்னு சொல்வாங்க இல்லையா? அதுக்கான நாள் இது தான். உங்களை லவ் பண்ற நபரோட மீட்டிங், டேட்டிங்னு அடுத்து வாழற வழியைப் பார்க்க வேண்டிய நாள்.

பிப்ரவரி 19

‘வாக்குமூல தினம்’ (Confession Day). உங்களோட முந்தைய காதல்ல நீங்க சொதப்பினதை யெல்லாம் சிந்திச்சு மாத்திக்க வேண்டிய நாள். அதையெல்லாம் அடுத்த காதல்ல செய்யவே கூடாதுன்னு உறுதி எடுத்துக் கிற நாளும்கூட.

பிப்ரவரி 20

‘காணவில்லை தினம்’ (Missing Day). ரொம்ப நாளா பார்க்க முடியலைன்னு நீங்க ஃபீல் பண்ற நபர்கிட்ட அதை நேரா சொல்ல வேண்டிய நாள். இது மூலமா உங்க மனசுல இருக்கிறதை அவங்க தெரிஞ்சுக்கலாம். புதுசா ஓர் உறவு ஆரம்பிக்கலாம்.

பிப்ரவரி 21

‘பிரிந்து செல் தினம்' (Breakup Day). நீங்க ஒரு டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்ல இருந்தீங்கன்னா, அதுல இருந்து வெளிய வர வேண்டிய நாள் இது. அப்படி வெளியே வந்தவங்க அடுத்த வருஷம் காதலர் தின வாரம் கொண் டாடறதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.