Published:Updated:

அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan  

நீட் ஆள்மாறாட்டம்
News
நீட் ஆள்மாறாட்டம்

குறைந்த அளவிலான மாணவர்களே எழுதும் நீட் தேர்வில், வெளிப்படையாகப் பல கெடுபிடிகளைச் செய்யும் தேர்வுக்குழுவினர், மிக மோசமான ஆள்மாறாட்ட தவறுகளை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள்..?

Published:Updated:

அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan  

குறைந்த அளவிலான மாணவர்களே எழுதும் நீட் தேர்வில், வெளிப்படையாகப் பல கெடுபிடிகளைச் செய்யும் தேர்வுக்குழுவினர், மிக மோசமான ஆள்மாறாட்ட தவறுகளை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள்..?

நீட் ஆள்மாறாட்டம்
News
நீட் ஆள்மாறாட்டம்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. முழுக்கை ஆடை அணிந்து வரக் கூடாது; தலையைப் பின்னிக்கொண்டு வரக் கூடாது; கைகால், கழுத்துகளில் அணிகலன்கள் கூடாது என மாணவர்களுக்குக் கடும் அழுத்தங்களை உருவாக்கி, கட்டுப்பாட்டோடு நடப்பதாகக் காட்டிக்கொண்ட தேர்வில், இவ்வளவு மோசமான தவறுகள் நடந்திருப்பது தேர்வு நடைமுறை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

doubt of a common man
doubt of a common man
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "நீட் தேர்வு ஆள் மாறாட்டம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதே தவறுகள் ஏன் கடந்த ஆண்டுகளில் நடந்திருக்கக் கூடாது. அதுகுறித்து விசாரிக்கப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார், வாசகர் அ.குணசேகரன்.

தமிழகத்தில் ஒவ்வோராண்டும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் டூ தேர்வை எழுதுகிறார்கள். தேர்வைக் கண்காணிக்க மாநில அரசிடம் சிறப்பான ஏற்பாடுகள் உண்டு. ஆங்காங்கே ஒரு சில பிரச்னைகள் ஏற்படுமே ஒழிய பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால், குறைந்த அளவிலான மாணவர்களே எழுதும் நீட் தேர்வில், வெளிப்படையாகப் பல கெடுபிடிகளைச் செய்யும் தேர்வுக்குழுவினர், மிக மோசமான ஆள்மாறாட்ட தவறுகளை எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பதும், கல்லூரியில் சேரும் வரை எப்படி அனுமதித்தார்கள் என்பதும் இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதேமாதிரி தவறுகள் கடந்தாண்டுகளிலும் நடந்திருக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Doubt of a common man
Doubt of a common man
நீட்
நீட்

இந்தக் கேள்வியை மருத்துவ மாணவர்கள் தேர்வுக்குழுவின் செயலாளர் டாக்டர் செல்வராஜனிடம் எழுப்பினோம். ``இப்படியான பொதுவான குற்றச்சாட்டுகளை ஏற்கமுடியாது. இதற்கு முன்பு இப்படி நடந்ததாகப் புகார்கள் இல்லை. அது தொடர்பாக எந்த விதமான ஆவணங்களும் எங்கள் வசம் இல்லை” என்று பதில் அளித்தார்!

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

<iframe src="https://special.vikatan.com/doubt-of-commonman/file.php" style="width:100%; height:100vh; border:none;overflow:hidden;"></iframe>