Published:Updated:

கீழடி: பாசிமணிகள், பானைகள், உறை கிணறு; 7-ம் கட்ட அகழாய்வில் கிடைக்கும் பொக்கிஷங்கள்!

உறைகிணறு
News
உறைகிணறு

தமிழக தொல்லியல்துறை 7-ம் கட்ட அகழாய்வை தற்போது நடத்தி வரும் நிலையில், கீழடிக்கு அருகில் அகரம், கொந்தகை கிராமங்களில் ஆய்வு நடத்தியதில் பல அரிய பொருள்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.

வியக்க வைக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அரிய பொருள்கள் கீழடி 7-ம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு வருவதால் தமிழக வரலாற்று ஆய்வாளர்களும் தமிழார்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கீழடி அகழாய்வு பணி
கீழடி அகழாய்வு பணி

தமிழர்களின் தொன்மை, நாகரிக மேன்மைக்கு எடுத்துக்காட்டாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தமிழர்களின் வரலாற்றை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்தது.

தமிழக தொல்லியல்துறை 7-ம் கட்ட அகழாய்வை தற்போது நடத்தி வரும் நிலையில், கீழடிக்கு அருகில் அகரம், கொந்தகை கிராமங்களில் ஆய்வு நடத்தியதில் பல அரிய பொருள்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.

கீழடி அகழாய்வு
கீழடி அகழாய்வு

பாசிமணிகள், சுடுமண் பானைகள், பெண்கள் அணியும் தங்க நகைகளும் எலும்புக்கூடுகளும் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய சுடுமணலால் ஆன தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொட்டியா அல்லது உறைகிணறா என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

உறைகிணறு
உறைகிணறு

உறைகிணறு போல காட்சியளிக்கும் இந்த வட்ட வடிவ தொட்டி மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. அடுக்குகளை இணைக்கும் இடத்தில் சங்கிலி வடம் போன்ற வடிவத்தில் சுடு மணலால் இணைத்துள்ளார்கள்.

கடந்த 6-ம் கட்ட அகழாய்வில் 38 அடுக்குகளைக் கொண்ட உறைகிணற்றைக் கண்டுபிடித்தார்கள். அதன்பின் தற்போது மூன்றடுக்கு கிணறு போன்ற தொட்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்த சுடுமண் பானை
கீழடியில் கிடைத்த சுடுமண் பானை

நம்மிடம் பேசிய தொல்லியல் அலுவலர்கள், ``இது உறைகிணறா, சுடுமண் தொட்டியா என்பதை இனிமேல்தான் ஆய்வு செய்து முடிவு செய்ய முடியும். அதனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை" என்கிறார்கள்.