Published:Updated:

மதுரை: கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழைமையான சதி கற்கள்!

சுமார் 400 ஆண்டுகள் பழைமையான சதி கற்கள், மதுரையில் கண்டுபிடிக்கப்பட்டு, தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

கணவன் இறந்த பின்னர், உடலை எரியூட்டும்போது, மனைவி அந்த நெருப்பில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்வதே சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம். சில இடங்களில் கணவன் இழப்பை ஏற்க முடியாத மனைவி, தனது விரும்பத்தின் பேரில் உடன்கட்டை ஏறினாலும், பல இடங்களில், ஊர் கட்டுப்பாட்டின் காரணத்தால் அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல், உடன்கட்டை ஏறும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் சதி வழக்கம் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் அவ்வப்போது கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வே.சத்திரப்பட்டிக் கண்மாயில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தபோது, மூன்று சதி கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சதி கற்கள்
சதி கற்கள்
சதி கற்களை, பல கிராமங்களில் தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என அழைத்து வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன்
மதுரை: `பிரசவத்துக்கு இலவசம்;  சேவைக்கு அபராதம்?’ - வைரலான ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ

கள ஆய்வினை மேற்கொண்ட மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் நம்மிடையே பேசும் போது, ``உடன்கட்டை ஏறும் மனைவி மற்றும் இறந்த கணவர் என இருவரையும் நினைவுகூரும் விதமாக நினைவுக் கல் செதுக்கப்படுவது வழக்கம். அதுதான் சதிகற்கள் எனவும் அழைக்கப்படுகிறது. அதில், இருவரும் உயிரோடு இருக்கும்போது எப்படி இருந்தனரோ, அதே போல ஆடை, நகைகள் அணிந்தவாறு சிற்பம் வடிக்கப்படும். இது போன்ற சதி கற்களை, பல கிராமங்களில் தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என அழைத்து வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன்
தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா: `தினசரி 2 மணிநேரம்; ஸ்க்ரிப்ட்’ -100 நாட்களை கடந்த மதுரை பெண்ணின் கோலங்கள்

வே.சத்திரப்பட்டி கண்மாய் முகத்துவாரப் பகுதியில் 3½ அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட இரு கற்களும், 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட ஒரு கல்லும் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு கல்லில், கணவர் ஒருவர் இரண்டு மனைவிகளோடு இருப்பது போன்று உள்ளது. இச்சிற்பங்கள் நாயக்கர் ஆட்சியின் தொடக்க காலமான கி.பி.16-ம் நூற்றாண்டாக இருக்கலாம். அப்படிப் பார்த்தால், சுமார் 400 ஆண்டுகள் பழமையான சதி கற்கள் இவை” என்றார் அவர்.

சமீபத்தில், மதுரை செக்கானூரணி அருகே உள்ளது கிண்ணிமங்கலம் கிராமத்தில், `ஏதன் ஆதன் கோட்டம்’ எனத் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு